குவிந்தா

இது நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்பட்ட உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் என பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது. குவீன்ரவர் என்ற பெயரைக் கொண்டு சிலர் இக்கோபுரத்தைப் பிரித்தானியர்களே கட்டியிருக்கக் கூடுமெனக் கருதியபோதிலும் இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும் அக்கோபுரத்தின் கட்டிட அமைப்பு, காலம் என்பவற்றைக் கொண்டும் அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தர்கள் என அறியப்படுகின்றன. இன்று அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம்.

Sharing is caring!

Add your review

12345