கூழங்கைத் தம்பிரான்- 1795
இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாஸ்திரங்களிலும் மிக்க பாண்டித்திய முடையவர். சிவபக்தியும் சிவானுபூதியும் உடையவர். யாழ்ப்பாணத்தில் 18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். இத்தம்பிரான் திருப்பனந்தாள் மடத்திலிருந்தபோது, அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போயினமை காரணமாகச் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கூசாது கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனாற் கை கூழையாகப் பெற்றவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் மிக்கபாண்டித்தியமுடையவர். சிவபக்த்தியும் சிவானுபூதியும் உடையவர்.
மாலை – சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
கலிவெண்பா – நல்லைக் கலிவெண்பா
புராணம் – தேவப்பிரசை திருக்கதை யோசேப்புப் புராணம்
வண்ணம் – கூழங்கையர் வண்ணம்
நன்றி – http://kanaga_sritharan.tripod.com இணையம்
சிவ சிவ