கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை

கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை
கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை இலச்சினை

கைதடி நுணாவில் கிராமத்தில் வாழ்ந்து வந்த கனகர் கதிர்காமர் என்பர் தனது காணியில் 04 பரப்பை மிசன் பாதிரிமாருக்குக் கொடுத்தார். 1901 ஆம் ஆண்டு இலங்கையில் அமெரிக்க மிஷனரியினர் செல்வாக்கச் செலுத்திய காலப் பகுதியில் சாவகச்சேரிப் பிரிவில் கைதடி நுணாலில் எனும் பகுதியில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் நிறுவப்பட்ட இப்பாடசாலையில் பரப்பும் மதம் மாறாமையினால் இப்பாடசாலையுடன் கூடிய காணி மிஷனரிமாரால் விலைக்கு விற்கப்பட்டது. ஆயினும் இவ்வூர்ப் பெரியவர்களும் சைவசமயத் தொண்டர்களினதும் தீர்மானத்திற்கேற்ப திரு. குமாரவேலு அவர்களால் விலைக்கு வாங்கப்பட்டது. இக்காணியிலேயே 1901 ஆம் ஆண்டு யா/கைதடி நுணாவில் அரசினல் தமிழ்க் கலவன் பாடசாலை (கைதடி நுணாவில் அ.த.க பாடசாலை) நிறுவப்பட்டது.
ஓலையினால் வேயப்பட்ட கட்டாயமாக ஆரம்பித்த பாடசாலையின் தலைமை ஆசிரியராக திரு. தம்பிராசா சட்டம்பியார் கடமை புரிந்தார். இவரின் கீழ் இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 20 மாணவர்கள் கல்வி கற்றனர். 05 வகுப்பினர் கல்விச் செயற்பாடுகள் நடைபெறுகின்ற தொடர்ந்து திரு. கந்தையா இளையதம்பி என்பவர் அதிபராகச் செயற்பட்டார். இவர் ஓய்வு பெற்ற பின் கந்தையாசிவம் அதிபரானார். இவரது காலப்பகுதியில் 04 ஆசிரியர்களும் 30 மாணவர்களுடனும் கல்வி செயற்பாடுகள் நடைபெற்றன. இவருக்கு பின் திரு. குமாரசாமி அவர்கள் திரு.வீரசக்தி அவர்கள், திரு.செல்லத்தம்பி அவர்கள், திரு.குமாரவேலு அவர்கள் அதிபராகக் கடமையற்றினார்கள். காலப்போக்கில் பிள்ளைகளின் தொகைஅதிகரித்துக் கொண்டுவந்தது.  இந்துபோர்ட் இப்பாடசாலைப் பொறுப்பெற்றது. தரம் 05 வரை இயங்கிக் கொண்டிருந்த இப்பாடசாலைக்கு மேலும் கட்டங்கள் அமைக்கப்பட்டன. தரம் 08 வகுப்புக்கள் நடாத்தப்பட்டது. பாடசாலையின் வளர்ச்சி தொடர்கிறது. தரம் 11 வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் கல்வி போதிக்கப்பட்டு வந்தது. தோடந்து இவ்வூரில் வாழ்ந்த திரு.வே. செல்லையா என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். 1986 இல் இவ்வூரைச் சேர்ந்த திரு.க. இளையதம்பி அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலப் பகுதியில் பாடசாலையில் கல்விச்செயற்பாடுகள் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் வளர்ச்சி கண்டது. தரம் 05 புலமைப் பரிசில் பாடசாலையில் மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்திற்குச் சென்றனர். இவரது திடீர் மரணத்தின் பின்பு திரு. சாம்பசிவம் அவர்கள், திரு.துரைசிங்கம் அவர்களும் அதிபர்களாககடமையாற்றினார்கள்.
1999 இல் திரு.வி. தெய்வேந்திரமூர்த்தி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் மாணவர்களின் தொகை அதிகரித்தது. ஆசிரியர்களின் தொகைகளையும் இருபதாக அதிகரித்தது. இவரது காலப்பகுதியில் பரீட்சைப் பெறுபேறுகள், விளையாட்டுகள், தமித்தினப் போட்டிகள் என்பவற்றில் மாணவர்கள் பங்குபற்றி கோட்டமட்டம், வலயமட்டம் என்பவற்றில் சான்றிதல்களைப் பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டில் இடம் பெற்றதரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வூரைச் சேர்ந்த மாணவி தென்மராட்சி வலயத்தில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு கா.பொ.த (சா/த) பரீட்சையில் பெறுபேற்று அடிப்படையில் தமிழ், சமயம், சமூகக்கல்வி பாடங்களுக்கு நல்ல பெறுபேறு கிடைத்தவுடன் ஆசிரியர்களுக்கும் சான்றிதல்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இவ்வாண்டு நடைபெற்ற சைவபரிராலனசபை பரீட்சையில் தரம் 05 மாணவி வெள்ளிம்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

2000 ஆம் ஆண்டு இடப் பெயர்வின் காரணமாகச் சுன்னாகம் மயிலணி வித்தியாலயத்துடன் சேர்ந்து இயங்கிய இப்பாடசாலை 2001 ஆம்ஆண்டு மீளவும் புனரமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து அதிபர் பகுதிதலைவராக இருந்த திருமதி.க. கணேசன் அவர்களினது விடாமுயற்சியினால் பலவளங்களையும் பெற்று வளர்ச்சி கண்டு வந்தது. அதிபரின் திடீர் மறைவைத் தொடந்து பகுதித் தலைவராக இருந்த திருமதி.க. கணேசன் அவர்கள் அதிபரின் கடமையைத் தொடர்ந்து நடாத்தி வந்தார்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 திகதி திரு.த. அம்பலவாணர் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் இடம் மாற்றம் பெற்றுச் செல்ல திரு.ஆ. தங்கவேலு அவர்கள் பதில் அதிபராகக் டமையாற்றி வருகின்றார்.

பாடசாலைக்கீதம்

கைதடி நுணாவில் வித்தியசாலை
சீருடன் வாழியவே
கைதடி நுணாவில் கலங்கரை விளக்காய்
கலையகம் வாழியவே
(கைதடி நுணாவில் )

பத்தொன்பதாம் நூற்றாண்டதில் மலர்ந்து
பலர் மகிழக் கல்வி கலை வளர்த்து
சித்தி தரும் அறிவு வீரம் செல்வம் யாவும்
முத்தென நல்கும் அறிவாலயம் எங்கள்
(கைதடி நுணாவில் )

சமயம் கணிதம் தமிழ் ஆங்கிலம் விஞ்ஞானம்
புவியியல் அழகியல் மனையியல் குடியியல்
விவசாயம் வரலாறு தொழில்நுட்பம் சுகாதாரம்
விளையாட்டிலும் வெற்றி மேம்படச் செய்திடும்
(கைதடி நுணாவில் )

பண்பொடு பழக்கமும் பல நமக்களித்து
அன்பொடு அருளும் ஒழுக்கமும் ஊட்டி
மண்பிசை மக்களின் மதிப்பினைச் சேர்த்திங்கே
இன்புடையோராய் இனிதெமை ஆக்கிடும்
(கைதடி நுணாவில் )

மேலதிக தகவல்களுக்கு – http://www.jkngtms.sch.lk/webs/site இணையம்

Sharing is caring!

Add your review

12345