கைலாசநாதக் குருக்கள்

கைலாசநாதக் குருக்கள்

ஈழத்திருநாட்டில் சைவக்குரமார் பாரம்பரியத்தில் தனித்துவமான ஒரு இடத்தை வகித்தவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத் துறையை உருவாக்கி நல்நிலைப் படுத்தியவருமான பேராசான் அமரர் கலாநிதி பிரம்மஶ்ரீ கைலாசநாதக் குருக்கள் (15.08.1921 – 07.08.2000) நல்லூரைப்பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை யா/நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலத்திலும், இடைநிலைக் கல்வியை யா/திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கற்றுப் பின்னர் ஆங்கிலம், கணிதம், வரலாறு ஆகிய பாடங்களங்கிய லண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சையில் சித்தி பெற்று ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய பாடங்கள் அடங்கிய இன்டமீடியற் கலைப்பரீட்சையிலும் சித்தி பெற்றவர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரியில் தமிழரசிரியராக பணிபுரிந்த இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத விரிவுரையாளராகவும் யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்துறை முதல் தலைவராகவும், இணைக் கலைப் பீடாதிபதியாகவும், இராமநாதன் நுண்கலை பீடத் தலைவராகவும் பணியாற்றிவர். வடமொழி இலக்கிய வரலாறு, சைவத்திருக்கோவில் கிரியை நெறி ஆகிய நூல்களை எழுதிய இவர் அதனை கற்கும் மாணவர்கள் பயன் பெறவும் வழிகள் கூறியவர். மேலும் இதிகாச புராணங்கள் கூறும் சைவம் பற்றியும் அதன் கிளை நெறிகள் பற்றியும் பூனே பல்கலைக்கழகத்தில் இவர் மேற.கொண்ட ஆய்வு குறிப்பிடத்தக்கது. யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு வாழ்நாள் பேராசிரியர் பதவி வழங்கியது. இவ்வாறான பதவி நிலையை யாழ் பல்கலைக்கழகம் இவருக்கே முதன்முதலாக வழங்கியது. 1998ம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது கௌரவ இலக்கிய கலாநிதி (D.Lit) பட்டத்தை யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கிக் கௌரவித்தது.

இந்து சமயப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு “வேதாகம மாமணி” என்னும் பட்டத்தை 1993ம் ஆண்டு வழங்கிக் கௌரவித்தது. இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல கருத்தரங்குகள், மகாநாடுகளில் கலந்து சிறப்பித்துள்ளார். இவரின் கலை இலக்கியச் செயற்பாட்டையும் சைவ மதத்திற்கு இவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பையும் மதித்து 1982ம் ஆண்டில் கலை, இலக்கிய பத்திரிகை நண்பர்கள் கொழும்பில் மணிவிழா எடுத்துச் சிறப்பித்தனர்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

3 reviews on “கைலாசநாதக் குருக்கள்”

  1. குருக்கள் ஐயாவை முதன்முதல் நான் நினைக்கின்றேன் 1985 – 86களில் நல்லூர் சிவன் கோவிலில் சண்டி ஹோமம் செய்தபோது பார்த்திருக்கின்றேன்! ஆண்டு நினைவில் இல்லை. ஆனால் 3 தினங்கள் அவர் செய்த அந்த மிகப் பக்குவமான பூஜை என்னால் இன்றும் மறக்க முடியாது! அவரிடம் ஆசி வேண்ட வேண்டும் என்ற ஆதங்கம் ஒரு நாள் அதுவும் திகதி நினைவில் இல்லை! பழம்றோட் பிள்ளையார் கோவில் ஐயாவீட்டுக்கு தம்பதியினராக வருகைதந்த ஐயாவிடம் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றதும் இன்றும் நான் உயிர்வாழ்வதற்கு ஒரு காரணமாக அமையும்!

  2. a.velmurugan says:

    how to get kailasanathar gurugal tamil books in tamilnadu please send adress

  3. குருக்கள் எமக்கும் குருநாதர். திருநெல்வேலியிலும்,கொழும்பிலும் 15 மாணவர்களுக்குமேல் குருகுலவாசமாக இருந்து கல்விகற்றோம். எமக்கு கிடைத்த பாக்கியம்.

Add your review

12345