கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி

ஆரம்ப கட்டம்: 1928 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசு நாயனார் மடாலயத்தில் திரு வே.அருணாசலம் அவர்கனால் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர் எண்ணிக்கை 200 ஆக இருந்தது. பூரண சைவப்பாடசாலையாக வளர்ந்து வந்தது.

வளர்ச்சிக் கட்டங்கள்:1980 களில் துரிதமான வளர்ச்சி 1983 இல் மகாவித்தியாலயமாகத் திகழ்ந்தது. 2003 இல் பவள விழாக்கண்டது. மாணவர்களின் அடைவுமட்டங்கள்  இணைப்பாடவிதான சாதனைகளும் வளர்ந்து கொண்டே வந்துள்ளன. மாகாண தேசிய மட்டங்களிலும் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்..

எதிர்நோக்கிய சவால்கள்: யுத்த அனர்த்தத்தினால் 1987 1996 2000 ம் ஆணடுகளில் பாடசாலைச் சொத்துக்கள் இழக்கப்பட்டதுடன் மாணவர் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக 2006 ல் தென்மராட்சி கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாடசாலை இடம் பெயர்ந்ததுடன் மாணவர் தொகையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. 1100 வரை இருந்த மாணவர் தொகை 800 வரை வீழ்ச்சி கண்டது.

ஏதிர்பார்ப்பு: கேந்திர முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் இப்பாடசாலை மாணவரின் கல்வித்தரத்தை மேலும் மேம்படுத்தி ஒரு 1ஏபி பாடசாலையாக தரமுயர்த்தி தென்மராட்சியின் முன்னணிப்பாடசாலையாகத் திகழ வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி : கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய இணையம்

மேலதிக விபரங்களுக்கு
Kodikamam Thirunavukkarasu M.V

Sharing is caring!

3 reviews on “கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி”

  1. தற்பொழுது யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம் அல்ல யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி. 🙂

  2. நன்றி. தங்களின் தகவல் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Add your review

12345