கோகிலா மகேந்திரன்

தெல்லிப்பழை விழிசிட்டி- கோகிலா மகேந்திரன் அவர்கள் ஒரு முன்னனிப் பெண் எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு கல்வியாளர் உளவியளாளர்  கவிஞர் நாடகக் கலைஞர் உளநலவியளாளர் முதலான பன்முகத்திறமை படைத்தவர் விஞ்ஞான ஆசிரியராயிருந்து அதிபராகித் தற்போது கல்வி நிர்வாகசேவையில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருக்கிறார்

இரைப்பற்றி பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ஈழத்துப் பெண் எழுத்தாளர் வரிசையிலே கோகிலா அவர்கள் தனக்கென தனிப்பண்புகளுடன்  வேறுபட்டுத் திகழ்வதை அவரது படைப்புகள் எமக்குப் புலப்படுத்துகின்றன ……நோய்தீர்க்கும் மருத்துவர் ஒருவர் நோயாளியைப் பகுப்பாய்வு செய்து நோயின் மூலத்தை இனங்காண முயல்வது போலக் கோகிலா அவர்கள் சமூக நோய்களுக்கான காரணிகளை உளவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்பவராக அமைகிறார்.

(தூவானம் கவனம் பின்னிணைப்பு பக்-151) தலையாய விமர்சகராக பேராசிரியர் கா.சிவத்தம்பி கோகிலா மகேந்திரனை மிகவும் போற்றி மதிப்பீடு செய்கிறார்.

“இப் பத்தாண்டு காலத்தில் (1978-1987) புனைகதை துறையில்…… பெண் எழுத்தாளர்களுள் முக்கிய இடம் பெறும் கோகிலா மநே்திரனும் முதன்மை இடத்தைப் பெறுவர் “ (ஈழத்தமிழ் இலக்கியம் 2 ஆம் பதிப்பு 1987பக்ஒஒii

இவர் இதுவரை பல சிறுகதைத் தொகுதிகளையும் நவீனங்களையும் கட்டுரைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார் மனித சொரூபங்கள் -1982 முரண்பாடுகளின் அறுவடை- 1984 துயிலும் ஒருநாள் கலையும் 1986-துயிலும் கவனம் 1988-கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு 1989-தங்கத்தலைமை 2000-எங்கே நிம்மதி முதலான பல நூல்களை வெளியிட்டுள்ளன மும்முறை சாகித்தியப் பரிசும் பெற்றார்

நவீன நாடகத்துறையில் சாதனைகளைப் புரிந்துள்ளார் பல கலைஞர்களை உருவாக்கியுள்ளார் பெண்ணில் எழுத்தாளராகவும் சிறந்த பேச்சாளராகவும் விளங்குகின்றார்

Sharing is caring!

Add your review

12345