[:ta]கோயிற்கடவை சித்தி விநாயகர்[:en]Kovitkadavai Siththy Vinayagar[:]

[:ta]கோயிற்கடவை சித்தி விநாயகர்

கோயிற்கடவை சித்தி விநாயகர் ஆலய வரலாறு
ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் குடியேறிய மக்கள் கோலோலை என்னும் மாதிரிக் கிராமம் ஆக்கி அப்பெயரும் இட்டனர். மாவிட்டபுரம் தெல்லிப்பளை சேரி ஒழிப்பு மதக்கண்டனம், உள்நாட்டு கலவரங்கள், அரசு போர்கள் காரணமாக கீழ்த்திசை நோக்கி இடங்கள் பெயர்ந்தனர்.  துன்பம் துடைக்க வழியும் திருவருள் கூட்டும். தெய்வப்பயமும் மந்திரம் வசியம் சூனியம் பேய் முதலியன விரட்டவும் பயிர் விருத்தியும் செல்வமும் ஓங்க பாதுகாப்பு அரனாக பெரிய வில்வமர வெள்ளரலிப்பற்றைக்குக் கீழ் சிறு கல்லுப் பிள்ளையாரை வைத்து வணங்கி வந்தார்கள். பண்டமாற்று முறைக்காலங்கள். கல்வியறிவு இல்லாத காலம்.

இக் காலத்தில் ஒரு வெள்ளை பிரதானி தனது முதலிகளிடம் திறைகள் வினாவிப் போகும் நேரத்தில் இவ்விடம் காடானபடியால் ஓர்நாள் வேட்டையாட நினைத்தான். ஊன்பசிதொடர உயிர்கொலை செய்ய
எண்ணினான் செகக்கொடிதேவன் குறிச்சியிறை நோக்கினான. அடர்ந்த முல்லைவனமாகிய காட்டுபுலத்தை அடைந்தான். மிகவும் வறட்சியுற்ற காலம் மானின்ற காட்டில் மான் மரை பன்றி போன்ற மிருகங்கள் அகப்படாமையால் பறவைகளை தேடினான். ஓங்கி வளர்ந்த வில்வ விருட்சமரம்
நெருக்கிய வெள்ளரலிபற்றை வில்வமரக்கிளையின் மேல் வில்லியம் இனமென வெண்கொக்கு சிறகு உதிர்ப்பதை கண்டான்.

கோயிற்கடவை சித்தி விநாயகர்

வெய்யோன் வெம்மை தாங்க முடியவில்லை. முழுச்சிரமத்துடன் கன்மவினை தொடர மனவினையை இலக்காக தன் கையமர்ந்த துவக்கினால் பதுங்கியே குறிதவறாது சுட்டான். இலக்குகள் தவறி வெண்கொக்கு வட்டமிட்டது. மனம் தளர்ந்த நிலையில் அலரிப் பற்றைக்குக் கீழே பார்த்தான். கல்லாத பேருக்கும் கருணை காட்டும் கல்லினைக் கண்டான் நாலு புட்பங்கள் சாத்தப்பட்டிருந்தன. இதனைக்கண்டு சிதறி ஓடிய மக்களை அழைத்து விசாரித்தான். கடவுள் “God” என்பதை அறிந்தான். கொக்கென்று நினைத்தனையோ கொங்கணவா என்றார்கள். வெள்ளையன் தானாகவே போய்விட்டான். இதனால் கொக்கறா முல்லைவன பிள்ளையாராயிற்று.
கொக்கறாமூலைக் கிராமப் பெயராயிற்று. 1800-ம் ஆண்டளவில் வீமன் சின்னையா சின்னத்தம்பி என்பவரின் அதிதீவிர முயற்சியினால் பொன்னும் பொருளும் புகையிலையும் சேர்த்து வருமானமாக்கி மக்களின் முழு ஆதரவுடன் ஒற்றுமையாக தோள்கள் சுமந்து தனிக்கல் தீராந்திகள் கொண்டு ஆவி அலறக் கட்டியெழுப்பிய பிரம்மாண்டமான ஆலயமே கோவிற்கடவை.

ஆதிக்குடியேற்ற மூல காரணப் பெயரை கோவிற்கடவையென இட்டனர். மாவிட்டபுர மல்லாக தெல்லிப்பழை விவாகத் தொடர்கள் இன்றும் உண்டு. சிதம்பரம் யாத்திரை செய்யும் மரபும் உண்டு. இன்றும் வெண்கொக்கு வெண்புறா வெண்ராஐநாகம் உலாவி வரும் ஆலயப் பூங்கொல்லையாகும்.
ஆலய அமைவிடம்
கோயிற்கடவை சித்தி விநாயகர்

அ)காணிப்பெயர் – காட்டுப்புலம் – ஆதீனக்குடியேற்றம் விநாயகர் வழிபாடு
ஆ)ஆலயப்பெயர் – கொக்கறாமுல்லைவனம் :- வேழமுகன் மகிமை
இ)கிராமம்- கோலோலை, கொக்கறாமூலை
ஈ)1800-ல் திரிபடைந்த பெயர்- கோவிற்கடவை -மாவிட்டபுர மரபு கோ + இல் + கடவை
ஆன்மா பாசம் நீங்கிப் பதியைத் தேடும் இடம். ஆலயக் கட்டியங்களில்
திருவூஞ்சலில் இவைகளை பகுத்தறியலாம்.
இவ்வாலய மூலட்டனேசுவரர் சித்திவிநாயகர் பரிவார உற்சவ மூர்த்திகள் வீரபத்திரர் முருகன் உட்பிரகார மூர்த்திகள் நாகதம்பிரான் முருகன் வைரவர் சண்டேசுவரர் தேவசபை நந்தி பலிபீடம் கொடிமரம் தீர்த்த கிணறு பூங்கொல்லை உண்டு.

சாலைகள்
ஆறு ஆதாரமண்டபங்கள் வசந்தம் யாகம் களஞ்சியம் மடப்பள்ளி திருமடம் இராசகோபுர அத்திவாரம் ஒலிபெருக்கி அறை வாகனசாலை அன்னதான பூமி தேர் சப்பறக் கொட்டகைகள் நூல்நிலையம் என்பன.
இரு ஆவண வீதிகள் உள. வெளிவீதி ஐங்கோண வடிவத்தில் உண்டு. பாசறைபோல் முக்கோணமாய் அமைந்த ஆலயம் மாண்புடையது. மிகவும் நீளமும் விசாலமானதும் ஆகும். முகவாயில் விருட்சங்கள் வெளிக்கிணறுடன் இத்திமரம். வேம்பும் வில்வமும மருதும் காலப்போக்கில் தறிக்கப்பட்டன. இவ்வாலய முன்புறத்தீர்த்தக்கேணி தூர்க்கப்பட்டு தோட்டமாக்கப்பட்டது. பதிலாக கற்குளு நற்தாமரை தடாகம் பாவிக்கப்பட்டது. (இப்போதல்ல). இன்று பூங்கொல்லையின் ஒரு பகுதியில் தீர்த்தக்கேணி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாலயம் தன்னகத்தே நன்மனைகள் பனங்காணிகள் தோட்டங்கள் வயல்கள் முதலியன சூழலாக கொண்டது. மிருகங்கள் பறவைகள் உல்லாசமாக வாழும் இடமாகும்.
இவ்வாலய சிறப்புகள்
1) முக்கோண வடிவில் ஐங்கோணத் தெருவுள்ள வெளிவீதி.
2) திருவூஞ்சலில் அரிதாக காணப்படும் பாய்க்கப்பல் பாட்டு துறைமுக சமீபம்
துன்னாலை சார்ந்த சிங்கை நகர் சமீபம் முதலியன வெளிப்படுத்தும் மரங்கள்
கற்கள் துறைமுக மூலமாக கொணரப்பட்டதாம்.
3 )திருவீமன் சின்னையா சின்னத்தம்பி காலத்தில் போட்ட இராச கோபுர அத்திவாரம்.
4) மான் வேட்டை ஆடல் ஊரெல்லை சாமியன் அரசடி ஞான வைரவர் ஆலயம்.
5) 1987-ல் கெலியிலிருந்து போட்ட குண்டு சிதறு சின்னமாயின.
6) கிரமம் தவறாத விழாக்கள் புராணப்படன விரிவுரைகள்.
7) சித்திவிநாயகர் பஐனைமலர் சுற்றுலாக் களிப்பு வெளியிடல்.
8) முக்கிய பணிகள் ஆண்டறிக்கை காணலாம்.
9) முக்கிய பிரசுரங்கள் வீரகேசரி உதயன் முரசொலிப் பத்திரிகைகளில் வெளியிடல்.
10) ஆலய உற்சவ சிறப்பு 1989-ம் ஆண்டு மகோற்சவ விளம்பரத்தில் காணலாம்.
ஆலயத்தில் முக்கிய விடயங்கள்
1) திருப்பணிப் பணம் தொண்டுகளுக்கே செலவழிதல்.
2) புராணப்படனம் உரைகளுக்கு காசு வாங்கும் வழக்கம் இல்லை.
3) திட்டத்திற்கு மேலாக எதுவித செலவுகளும் வருவதில்லை.
4) பரிபாலன சபையில் கற்றவர்களும் நிகழ்ச்சிகளை வைக்கும் தன்மையும் ஆலயக்கிரம வரவும் புராணங்களை செயல்படுத்துவதுபவர்களும் தூய்மையும் மதிப்பும் நேர்மை கடமை கட்டுப்பாடும். ஆலயப் பொருட்களை பராமரிப்பவரும் இலக்கிய சமய அறிவுடையவரும் நிர்வாகத்தில் இருத்தல் வேண்டும்.
5) யாவருடைய மனதையும் கவர்ந்து ஒற்றுமையை பேணவேண்டும்.

சித்திவிநாயகர் செய்த அற்புதங்கள்
கோயிற்கடவை சித்தி விநாயகர்

தெற்கு வாசலுடன் தேசாந்த செலவாணி வருதல். விடுதலை இயக்கமுடன் வீரர் உயர்கல்வி அடைதல். குண்டுகள் தகராமை கிராமப்பஞ்ச அழிவின்மை. இளைஞர்களின் நல்ல பண்புகள் கூட்டுறவு பக்தி வலிமை. கிரியைகள் தவறாது நடத்தல். உத்தியோக வாய்ப்புக்கள். பிரயாணப் பாதுகாப்பு. தனிப்பட்ட உதவிகள் கனவிலும் காட்டல். மங்கையர்கள் வரவும் சங்கீத லயமும் அளித்தல். நீர்நிலவளம் கொடுத்தல் மக்கள் பணிஉளம் கொள்ளல். இந்தியா சுற்றுப் பிரயாண யாத்திரை செய்தல். தன்னகத்தே சிலரை செயற்பட வைத்தல்.
ஆலயப் பூங்கொல்லை
1977-ம் ஆண்டு பரிபாலன சபை பூங்கொல்லையைப் பராமரிக்கத் தொடங்கியது. சுற்றுமதில் மோட்டோர் பதித்த நீர்த்தொட்டிக் குழாய்கள் வருமான பயிர்கள் பூமரங்கள் காலாகாலம் நாட்டப்படும். சில ஆண்டுகளுக்கு முன் ஆலயப் பூசகரிடம் கையளிக்கப்பட்டது. வருமானப்பயிர்களும் பூமரங்களும் நிரந்தரமானதாக கணக்கெடுக்கமுடியவில்லை. பராமரிப்பில்பொறுத்திருக்கிறது. அழகான நந்தவனம் அத்திமர நிழலுடன் அன்னதான பூமிக்கருகில் பொலிவுறுகின்றது. இப் பூங்கொல்லையில் பூமரங்கள் தென்னைகள் கமுகமரங்கள் அன்பளிப்புச் செய்தவர்கள் திரு.ஆ.மகாலிங்கமும் அவரது மைத்துனர் திரு.விசுவர் பொன்னையா செங்கழுநீர் தடாகம் அமைத்த பெரியார்.
ஆலயம் சார்ந்த இளைஞர்கள்
கோயிற்கடவை சித்தி விநாயகர்

1976-ம் ஆண்டு தொடங்கி இன்று வரையும் இவ்விளைஞர் ஆலயப்பணி நூலகப்பணி யாவற்றிலும் முன்னின்று ஒற்றுமையாக பல உதவிகள் புரிகின்றார்கள். இவர்களிடம் கல்வி ஆர்வம் நலலொழுக்கம் கடின
உழைப்பு தர்மசிந்தனைகள் போன்ற உயர்ந்த பண்புகளை காணலாம். தற்கால ரீதியில் காண்பது அரிது யாமெல்லாம் இவர்களுக்கு தனிமையான கௌரவம் பாராட்டு கொடுக்க வேண்டியவர்கள். ஆலயப்பணி நூலகப்பணி பணம் முழுவதும் வெளிநாட்டு இளைஞர்களின் செலவாணியே. இவர்களின் மூலதனம் கொண்டபணிகளை ஆண்டறிக்கைகளில் காணலாம். மேலும் பணிகள் மேற்கொள்ள அரசியல் சூழ்நிலை சரியாக இல்லாத காரணத்தால் அதிக பாதிப்புகளை அடைகின்றன.

 

தைமாதம்- தைப்பொங்கல் மணவாளக்கோலம்
மாசி – மகோற்சவம் 10 நாட்கள்
சித்திரை- புதுவருடப் பொங்கல்
வைகாசி -கந்தபுராண படனம் முழுவதும்
ஆனி ஆடி – அன்னதானம்
ஆவணி- விநாய சதுர்த்திப் பெருவிழா
புரட்டாதி- வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தீர்த்தோற்சவம்(17-ம் திருவிழா)
காவடி எடுத்தல்
ஐப்பசி-கந்தசஷ்டி 6 நாள் யுத்தகாண்டப்படனம் சூரபன்மன் வதைப்படலம்
முடியவும் சூரன்போர் விழா மறு நாள் தேவகாண்டப்படனம் முழுவதும்
கார்த்திகை-சர்வாலய தீபம்
மார்கழி- பிள்ளையார் நோன்பு-21நாட்கள்
பிள்ளையார் கதை படித்தல்
திருவாதிரை விரதம் 10 நாட்கள்
சுப்பிரபாதம் திருபள்ளியெழுச்சி திருவெம்பாவை
திருவாதவூரடிகள் புராணபடனம் முழுவதும்
விசேட பாராயணங்கள
திருமுறைகள்
திருப்பொற்சுண்ணம்
அறுபடை வீடுகவசம்
விநாயகரகவல்
பஐனை சிவபுராணம்
சுற்றுலா ஆனந்தகளிப்பு
திருவூஞ்சல் பாட்டு
நாராயண பஐனைமலர்

வீரபத்திரர் ஆலயம்
ஆதியில் திரு சுப்பர் பொன்னையா வளவில் வேம்பின் கீழ் பராமரித்து காவல் தெய்வமாக இருந்தது. இதற்கு வல்லியார் முருகுகேசு தோம்பென்றும் இலகுமூலை பதிராயன்சீமா காணிகளில் பிற்காலத்தில் எழுந்தருளிவிக்கப்பட்டது. இதுவரை இதன் சாதனங்கள் வெளிவரவில்லை இது ஒரு மடாலாயம் திரு.க. வேலுப்பிள்ளையும் அவரது சகோதரங்களும் பராமரித்து வந்தனர். சூலமே அநாதிச்சிலையாகும். ஆண் சந்ததியினர் பிள்ளைகளற்றுப் போக பெண்சந்ததியினர் 1977-ம் ஆண்டு பாரமெடுத்தனர். 22-8-81-ல் திரு.க.வேலாயுதம் திரு.ஆ. சிதம்பரப்பிள்ளை அவர்களின் அதிக முயற்சியினால் கற்கோயில் இருமண்டபமுடன் அமைத்து சிலையமைத்து சிவாகம் விதிப்படி கும்பாவிஷேகம் நடைபெற்றது . திரு.பொ.சிவலிங்கம் திருவாசி அன்பளித்தார். வருங்காலத்தில் இதன் பரப்பளவை அளவையாளர் கொண்டு படம் எடுக்கலாம். ஆலயத்துடன் தீர்த்தக்கிணறு ஒரு வீதிபொங்கல் இடம் முகவாயில் கொண்டுள்ளது. மேலதிக நிலங்களை வரையறவு செய்யலாம். இவ்வாலயம் பெருப்பிக்கமுடியாது.
முக்கிய தினங்கள்
அ. சித்திர பௌர்ணமி கஞ்சிவிரதம் சித்திரபுத்திர நயினார் பசுவின் கதைபடித்தல்.
ஆ. கும்பாவிஷேக தினமடை அபிஷேகம்
இ. விநாகர் தீர்த்தொற்சவ உலா உபயம்
கோவிற்கடவை சித்திவிநாயக ஆலய பூசகரே இதனை செய்வார். வீரபத்திர விக்கிரகம் பிள்ளையார் ஆலயத்தில் எழுந்தருளப் பெற்றதால் இங்கு பழைய முறைப்படி சிறுமடாலயமாக்கி கருமங்கள் குறைவு பெற்றன. சிறிய ஆலயத்தின் சீரிய சேவைகள் தொடரட்டும் அல்லது கைவிடப்படலாம். மக்கள் மனநிலையைப் பொறுத்துவே.

By – Shutharsan.S

நன்றி- மூலம்- கோவிற்கடவை இணையம்[:]

Sharing is caring!

Add your review

12345