கோவிற்கடவை கிராமம்

கோவிற்கடவைகோவிற்கடவை கிராமம் பற்றிய வரலாறு. வான்பொய்ப்பினும் தான் பொய்யா வளமுடை வடமாகாணம் யாழ்மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதி கட்டைவேலி கோவிற்பற்று துன்னாலை தெற்கு சார்நத சிறு கிராமம் இக் கோவிற்கடவை கிராமம். இக் கிராமமும் ஆலயபெயர் மருவியே கோயில் உள்ள ஊரில் குடியேறினர். இத்துன்னாலை பழம்பெரும் பெருமையுடையது. துன்னாலையில் பரவலாக காணப்படும். ஆலயம் சார்ந்த குக்கிராமங்களில் இதுவும் ஒன்று உ+ம் புளியங்கியான் வெலிக்கன் தோட்டம் இந்திரம்மன் அல்லையம்பதி கோவிற்கடவை குருக்கட்டு வல்லிபுர ஆழ்வார் ஆலயம் கொட்டிகிழுப்பான் முதலியன இத்துன்னாலையின் மேற்கு ஊரெல்லை ஆலயக்கிராமமாக விளங்குவதும் அணித்தாயதும் கோங்குயர் கோவிற்கடவை தாமரைக்குளம் பிட்டனி திரு.கதிரேசு வீடு தொடங்கி சாமியன் அரசடி ஊரெல்லை ஞானவைரவா ஆலயம் மட்டும் விசாலமாய் அமைந்த 350 குடிகள் கொண்ட சிறிய கிராமம் கிராமப்பிரிவுகள்-கொள்வளித்தோட்டம் புளியடி நெடிலி தாமரைக்குளம் மித்திலடி அனிஞ்சிலடி கள்ளியடி என்பன அம்பம் ஆஸ்பத்திரி வரை கள்ளியடிக் காணிகள் முடக்காடு எல்லை காலவரையறவில் மதுவின் காரணம் கடன்சுமையால் மணிவிலைக்கு சில நன் செய்நிலங்கள் விற்கப்பட்டன. கோவிற்கடவை ஆலயம் மந்திகை கலிகை ஊடறுக்கும் பெருந்தெருவில் துன்னாலை மான்நின்ற காட்டருகில் காட்டுப்புலம் எனும் காணியில் எழுந்தருளியிருக்கின்றது.

கிராமத்தோற்றம்

கோவிற்கடவை8-ம் நூற்றாண்டில் வட பகுதியைக் கந்தரோடை எனும் கதிரமலையில் உக்கிரமசிங்கன் ஆட்சிபுரியும் காலம் மங்கைவதனம் மாருதப்பிரவல்லியை மணந்து மாவிட்டபுரக் கோயிலும் கட்டினான். மாவிட்டபுரத்தின் ஆதிப்பெயர் கோவிற்கடவை. இத்துடன அரசன் தன் மனைவிக்கு பகைவரிடமிருந்து பாதுகாப்பு அரனாக தனது இராசதானியை சிலகாலம் சிங்கை நகர் எனப்படும் வல்லிபுரத்தில் கோட்டை அமைத்தான். சிங்கை நகர் ஆராய்வுகள் பிற்காலத்தில் செய்யப்பட்டன. கற்ற நூல் துணிவு தெளிவு முடிவுகள் மாறுபடுகின்றன. அடிக்கடி படையெடுப்புக்கள் கலகங்கள் அந்நியர் வருகை முதலிய காரணங்களால் மக்கள் இடங்கள் பெயரவேண்டி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் சோழ மண்டலத் தொடர்பும் கர்நாடக தேசத் தொடர்பும் இக் காலகட்டத்தில் குடிகொண்டன. போத்துக்கேயர் ஒல்லாந்தருடைய ஆட்சி காலத்தில் மாவிட்டபுரம் தெல்லிப்பளை முதலிய இடங்களிலிருந்து மக்கள் குடியேற்றத்தை பல பகுதிகளிலும் மேற்கொண்டனர். ஒருபகுதி மாவிட்டபுரம் மரபின் மேவிய தொண்டை மண்டலம் காரைக் கோட்டு வேளாளர் மரபும் கொண்ட வேலர் சங்கரர் தோப்பு தர்மசாதனம் காட்டுப்புலம் மேவிய சித்திவிநாயகர் ஆலயக்காணியும் வேலர் சங்கரா முதன்மை காட்டி எழுதப்பட்ட நாட்டுக்கோட்டு செட்டி தெல்லிப்பளை மரபின் மேவிய வல்லியார் பெண் கண்ணி தோம்பு பளவளவு தர்மசாதனம் தேரோடு வீதியும் திருவட ஒழுங்கையும் மறுபகுதியாகவும் சேர்ந்த ஆலயமும் இதனையடுத்த செகக்கொடி தேவன் குறிச்சியிறை வீரசுந்தரமுதலி குறிச்சியிறைக் காணிகளிலும் மக்கள் குடியேறினர். இக் குறிச்சி முதலிகளும் சுடலை அருகே வாழ்ந்தனர் குடியேறிய காலத்தில் கோலோலை எனப்பெயரிட்டனர்.

ஆகவே கோலோலை கொக்கறாமுல்லை கோவிற்கடவையாக தற்காலத்தில் வழங்கலாயிற்று ஆதியில் 7 குடிகள் மட்டும் இருந்தன அவர்களின் இனப்பெருக்கமே இன்றைய ஒரு கொடியான 350 குடிமக்கள்.

இக்கிராம எல்லைகள்

வடக்கு-கொட்டடித்தோட்டம்
கிழக்கு-துன்னாலை
தெற்கு-கலிகை பிரதான வீதி
மேற்கு-முடக்காடு சாமியன் அரசடி வைரவர் ஆலயம்

By -‘[googleplusauthor]’

நன்றி- மூலம்- கோவிற்கடவை இணையம்

Sharing is caring!

Add your review

12345