க.அம்பலவானர் (காரைக்கால் சாமியார்)

மரபு ரீதியாக வழிவழி வந்த இணுவிலைப் பிறப்பிடமாக கொண்ட அ.கதிரித்தம்பியின் ஏகபுத்திரனாக அவதரித்தார் அம்பலவாணர். தந்தையார் மறுமை எய்தியதால் சிறுவயதிலே கல்வியை இடைநிறுத்தியதோடு தாயாருக்கு உதவுவதிலும் இவரது பொழுது போயிற்று. வைத்தியர் நடராசா அவர்களின் கனவிலே சிறிய உருமுடைய இளைஞன் ஒருவனின் தோற்றம் ஒன்று தென்பட்டது அதனை நண்பர் செல்லப்பாவிடம் தெரிவிக்க அவரே அம்பலவானரினை நடராசாவிடம் அழைத்துச் சென்றார். நடராசா அம்பலவாணரினை சீடனாக ஏற்று குருவுபதேசம் செய்து சித்த வைத்தியம், விஷகடி வைத்தியம், மாந்திரிகம், சோதிடம் யாவற்றையும் நன்கு புகட்டினார். இதனைக்கற்றுக் கொண்ட அம்பலவாணர் மேற்படி துறைகளில் நாட்டம் கொண்டு விஷகடி நோயினால் வாடியவர்களை தீர்த்தும், பெல்லி சூனியத்தால் தாக்கமடைந்தவர்களையும் மீட்டெடுத்தார். தூரஇடத்தில் இருந்து வரும் நோயாளர்கள் வசதி கருதி மடங்களும், சிறுகுடிசைகளும் அமைத்துக் கொடுத்தார். நோய் தீர்த்து பெறும் பணத்தினை விஸ்வநாதப் பெருமான் திருக்கோயில் பணிக்கே செலவிட்டார்.

பெரிய சந்நியாசியால் நாட்டப்பட்ட 1008 பயன் தரு மரங்களும் காரைக்கால் சுவாமியினாலே பராமரிக்கப்பட்டன. இவருடைய அணிகலன்களாக சடைமுடியும், தாடியும், வேட்டி சால்வையுமேயாகும். இவருடைய உடல் சமாதியடைந்ததும் பூக்களாலான தேரிலே அலங்கரிக்கப்பட்டு பவணியாக வந்து காரைக்கால் சிவன் கோயில் மேற்குப்புறத்திலே தனியான காணியில் இவரது சமாதி வைக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டு தைப்பூசத்தினத்திலேயே சமாதியடைந்தார்.

நன்றி: தகவல் – மூ.சிவலிங்கம்
மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

1 review on “க.அம்பலவானர் (காரைக்கால் சாமியார்)”

Add your review

12345