சந்திரோதய வித்தியாசாலை

உரும்பிராய்ச் சந்தியின் அயலிலுள்ள காணியில் 28.10.1982 இல் ஆரம்பிக்கப்பெற்ற உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை. மாணவர் கூடக்கூட இடநெருக்கடியும் ஏற்பட்டது. எனவே மானிப்பாய் வீதியில் உள்ள காணியில் கட்டடங்களை அமைத்து அந்த இடத்துக்கு வித்தியாசாலையை மாற்ற (1942) நேரிட்டது. சந்திரோதய வித்தியாசாலை இப்பொழுது இமைந்திருக்கும் வளவும் உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலயபரிபலான சபையினரிடமிருந்து குத்தகைக்குப் பெறப்பட்டதே. ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 8 வரை கொண்டதாக இயங்கிவரும் உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை அறிஞர்கள் பலரை உருவாக்கிய கல்விக்கூடம் என்பதை நாம் மறத்தலாகாது. இவ்வித்தியாலயத்தின் தோற்றத்துக்கு உழைத்தவர்களில் திரு. ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் (இராசா – வேலுப்பிள்ளை) முக்கிய இடம்பெறுவார்கள்.

நன்றி – உரும்பிராய் இணையம்

Sharing is caring!

Add your review

12345