சாவகச்சேரி மகளிர் கல்லூரி

தென்மராட்சிப் பிரதேசத்தில் பெண்களுக்கென்று தனியான ஒரு கல்லூரி வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு இக்கல்லூரி உதயமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்களின் முயற்சியினால் சாவகச்சேரி மகளிர் மகா வித்தியாலயம் என்ற பெயருடன் 1952ம் ஆண்டு தைமாதம் 14ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரியை அமைப்பதற்கு நாற்பது பரப்புக் காணி திரு திருமதி கந்தசாமி அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.  இதனை உருவாக்க சட்டத்தரணி திரு.கே. திரவியநாயகமஇ திரு.  தம்பிப்பிள்ளை இருவரும் பக்கபலமாக இருந்தனர் ஆரம்பத்தில் மூன்று ஆசிரியர்களையும் 14 மாணவிகளையும் கொண்டு இக் கல்லூரி இயங்கியது. இக் கல்லூரியின் முதல் அதிபர் செல்வி பாலாம்பிகை கனகசபை அவர்கள் ஆவார்.

ஆரம்பத்தில் தரம் ஒன்ற தொடக்கம் க.பொ.த சாதாரணதரம் வரை வகுப்புகள் நடைபெற்றன.
1963ம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கலைப்பிரிவும் 1984ம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் வர்த்தகப்பிரிவும் 1992ம் ஆண்டு க.பொ.த. உயர்தரம் கணித  விஞ்ஞான பிரிவு 1993ம் ஆண்டு 1AB பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
1996ம் ஆண்டு யா /சாவகச்சேரி மகளிர் கல்லூரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு
Chavakachcheri Ladies’ College
நன்றி : சாவகச்சேரி மகளிர் கல்லூரி இணையம்

Sharing is caring!

1 review on “சாவகச்சேரி மகளிர் கல்லூரி”

Add your review

12345