சுதுமலை ஸ்ரீ முருகமூா்த்தி ஆலயம்

சுதுமலை மத்தியில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆலய அர்ச்சகரும் ஆலய ஏக தர்மகர்தாவுமான பிரம்மஸ்ரீ அப்பாத்துரை ஐயா அவர்களால் நித்திய கருமங்கள் நிறைவேற்றப்பட்டன. அவரது மறைவுக்குப் பின் ஆலய நித்திய கருமங்கள் கட்டிட பராமரிப்புக்கள் முதலிய செயற்பாடுகளைக் கவனிக்க யாருமின்றி நீண்ட காலம் பாழடைந்து புதர் சூழ்ந்து தேடுவாரற்ற நிலையிலிருந்தது.

சுதுமலையைச் சேர்ந்த சமயத்தொண்டரும் சிறந்த சமூக சேவகருமான ஓய்வுபெற்ற கூட்டுறவுப் பரிசோதகர் அமரர் திரு முத்துத்தம்பி இராமநாதன் அவர்களின் முயற்சியும் ஊரார்களின் ஒத்துழைப்புடனும் இளைஞர்களின் முயற்சியுடனும் புதிய தர்மாகர்த்தா சபை ஒன்று உருவாக்கபட்டு இந்து சமய விவகார அமைச்சில் பதிவுசெய்து, ஆலய புனருத்தாரணம் ஆரம்பிக்கப்பட்டது. 1985ம் ஆண்டு கோவில் புதுப்பொலிவு பெற்று மகாகும்பாபிஷேகம் இடம்பெற்றது.

பிரம்மஸ்ரீ அப்பாத்துரை ஐயா அவர்களின் தம்பி ஐயாத்துரை ஐயர் அவருடைய மகன் இரத்தினக்குருக்கள் அவருடைய மகன் நாகேஸ்வரசர்மா என பரம்பரையாக ஆலயத்தின் கிரியைகளை நிறைவேற்றி வருகின்றனர். 1985 இலிருந்து ஆலய நித்திய நைமித்திய கருமங்கங்களை பிரம்மஸ்ரீ நாகேஸ்வரசர்மா செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்.

1987ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கோயில் பலத்த சேதத்திற்குள்ளானது. மீண்டும் 1988ம் ஆண்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது. 1999 பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புதிதாக வசந்தமண்டபம், வாகனசாலை, உள்வீதி கொட்டகை என்பன அமைக்கப்பெற்றன. இதில் உள்வீதி கொட்டகை வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

2008 ம் ஆண்டு முதல் மகோற்சவம் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகின்றது. ஆலயத்தின் ஸ்கந்தஷஷ்டி உற்சவம் ஒவ்வொரு வருடமும் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசேட தினங்கள்
ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவம்.
தைப்பூசம்
மாசி பௌர்ணமியை தீர்த்த உற்சவமாக கொண்ட 10 நாள் வருடாந்த மகோற்வம்.
சித்திரை வருடப்பிறப்பு
ஆவணி மூலம்
தீபாவளி
ஐப்பசி வெள்ளி,
ஸ்கந்த ஷஷ்டி
திருக்கார்த்திகை
திருவெம்பாவை

நன்றி – மூலம்-http://www.suthumalai.com,இணையம்

Sharing is caring!

Add your review

12345