சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்

யாழ்ப்பாணம் சைவ வித்திய அபிவிருத்தி சங்கம் வடபகுதியின் பாடசாலைகளை நிர்வகித்து கல்விப் பணிக்கு பெரிதும் தொண்டாற்றிய காலம் அது. 1926 இல் பெருங்காட்டு பகுதியில் சைவம் வளர்த்து வந்த அமைப்பான சைவ கலா மன்றம் செய்த சிபார்சின் அடிப்படையில் சைவ வித்திய அபிவிருத்தி சங்கத்தினால் இந்த பாடசாலை அப்போதைய யாழ் இந்து கல்லூரி அதிபராக விளங்கிய டிரூப் அவர்களினால் திறந்து வைக்கபட்டு தலைமை ஆசிரியராக நமசிவாயம் பணி புரிய தொடங்கினர் . இவரைத் தொடர்ந்து எ.து.சின்னையா அவர்களும் பின்னர் பேராசிரியர் சி.இ.சதாசிவம்பிள்ளை( 1929 ) அவர்களும் சிறப்பான முறையில் அதிபர்களாக கடமை புரிந்து பாடசாலையை கட்டி எழுப்பினர். தமிழையும் ஆங்கிலத்தையும் போதிக்கக் கூடிய வகையில் இந்த பாடசாலை இல் துவிபாஷா பாடசாலையாக மற்றம் கண்டது. ஆனாலும் சில வருடத்தில் பசுபதிபிள்ளை அவர்களின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்க வைக்கப் பட்டது. பின்னர் அதிபராக பணியேற்ற கு.வி.செல்லத்துரை அவர்கள் பாடசாலைக் கட்டித்தை சிறந்த முறையில் திருத்தி அமைத்ததோடு புங்குடுதீவில் உள்ள ஒரே ஒரு மகளிர் வித்தியாலயமாக மாற்றி வைத்தார்.

அந்த காலத்தில் ஆசிரியராக பணி புரிந்த எ.கனகரத்தினம் அவர்கள் புலமைப் பரிசில் பரீட்சைக்கென மாணவர்களை விசேசமாக தயார் செய்து வெற்றியும் கண்டார். 1966இல் இப்பாடசாலை எஸ் எஸ் சி வரையான வகுப்புகளை கொண்ட மகா வித்தியாலயமாக உயர்த்தப் பட்டது . 1980இல் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப் பட்டது. ஒரு மகளிர் வித்தியாலயமாக இருந்தாலும் ஐந்தாம் வகுப்பு வரை இரு பாலார் வகுப்புகளாகவும் அதற்கு மேலே தனி மகளிர் வகுப்புகளாகவும் இயங்கின
1973முதல் 1985வரை யோ.ச.செல்வராசா அவர்கள் சிறப்பான ஒரு அதிபராக கடமை ஆற்றி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார். இவரது ஆங்கில புலமை இந்த பாடசாலை மாணவர்களை ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்க உதவி புரிந்தது . இவரை தொடர்ந்து 1985முதல் 1988 வரை திருமதி மனோன்மணி தனபாலசிங்கம் அவர்களும்1988 இலிருந்து 1997வரை செல்வி.ம.சுப்பிரமணியம் அவர்களும் 1997முதல் நாகநாதி பஞ்சலிங்கம் அவர்களும் அதிபர்களாக இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.
மக்கள் இடம்பெயர்வின் பின்னர் இப்பாடசாலை 1992முதல்1995 ஐப்பசி வரை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் விடுதி மண்டபத்தில் இயங்கியது. பின்னர் சிறிது காலம வேலணை ´கிழக்கு மகா வித்தியாலயத்தில் இயங்கியமை குறிப்பிடத் தக்கது . புங்குடுதீவின் மீள் குடியமர்வை தொடர்ந்து மீண்டும் நிரந்தரமான இடத்தில் 1997 தை பதினைந்த திகதி முதல் இயங்க தொடக்கி தனது கல்விப் பணியை ஆற்றுகிறது இந்த கல்வி சாலை .

 

Sharing is caring!

Add your review

12345