சேர் முத்து குமாரசுவாமி

சேர் முத்து குமாரசுவாமி (இ. மே 4, 1879) இலங்கைச் சட்ட சபையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்து 17 ஆண்டுகள் சேவை புரிந்தவர்.யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தையாரான குமாரசுவாமி முதலியாரே முதலாவது தமிழ்ப் பிரதிநிதியாக இருந்தவர். சேர் முத்துக் குமாரசுவாமியின் புதல்வர் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி ஆவார்

சைவ சமயச் சொற்பொழிவாளர்

முத்து குமாரசுவாமி சைவசித்தாந்தத்தினை முதன் முதலில் ஆங்கிலேயருக்கு விளக்கியவர். 1857 ஆம் ஆண்டு மாட்சிமை பொருந்திய ஆசியச்சங்கத்தின் (Royal Asiatic Society) இலங்கைக் கிளையில்
சைவசித்தாந்தச் சுருக்கம்” எனும் ஒரு கட்டுரையினை வாசித்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அச்சங்கத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞரான முத்துக் குமாரசுவாமி தமது 24 வது வயதில் இக்கட்டுரையை எழுதி அச்சபையில் விளக்கியுள்ளார். 1860 ஆம் ஆண்டு “இந்து சமயம்” என்ற கட்டுரை அதே சபையில் வாசிக்கப்பட்டு சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
தாம் ஒரு இங்கிலாந்து வழக்கறிஞர் (Barrister) ஆவதற்கு இங்கிலாந்து சென்ற போதும் தமது சமயத்திலும் தத்துவத்திலும் அவருக்கிருந்த ஈடுபாடு குறையவில்லை எனலாம். அரிச்சந்திரனின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி ஆங்கிலேய நடிக நடிகைகளுடன் தாம் அரிச்சந்திரனாக நடித்து அரச சபையில் மேடையேற்றினார். விக்டோரியா மகாராணியாரால்சேர் பட்டம் முத்துக் குமாரசுவாமிக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழிப் பேச்சுத் திறனுக்கும் நடிப்புக் கலைக்குமாக இக்கௌரவம் கொடுக்கப்பட்டதாக இலண்டனில் வெளிவந்த Illustrated London News என்ற பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஆசியாவிலேயே முதன் முதல் “சேர்” பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் முத்துக்குமாரசுவாமி.
அரிச்சந்திரன்‘ நாடகமாக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டபோது அதன் பின்னிணைப்பாக ‘சைவசித்தாந்தச் சுருக்கம்‘ என்ற கட்டுரை சேர்க்கப்பட்டது.
சேர் முத்துக் குமாரசுவாமி அவர்கள் இலண்டனில் உள்ள கலைக் கூடங்களில் (Arts Councils) தொடர்ச்சியாகச் ‘சைவ சித்தாந்தம்’ பற்றியும் ‘இந்தியத் தத்துவம்‘ பற்றியும் சொற்பொழிவுகள் ஆற்றினார். சேர் முத்துவின் ஆங்கிலச் சொல்லாட்சியினை மெச்சி அவர்கள் அவரை “கிழக்கின் மிகச் சிறந்த நாவன்மை படைத்தவர்” (The Silver tongued Orator of the East) என்று அழைத்தனர்.

Sharing is caring!

Add your review

12345