சைவத்தமிழ் வித்தியாலயம்

03.12.1915 இல் உரும்பிராய் இந்துக் கல்லூரி வளவில் இந்துக் கல்லூரி அதிகார சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலையே சைவத் தமிழ் வித்தியாசாலை, இடநெருக்கடி காரணமாக 1949 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓடையம்பதி கற்பகவிநாயகர் ஆலயத்துக்கு உரிமையான காணியிற் கட்டடங்கள் அமைக்கப்பட்டு கற்பகபிள்ளையார் வீதியில் சைவத் தமிழ் வித்தியாசாரலை இடமாற்றம் செய்யப்பட்டது.
ஆண்டு 1 தொடங்கி ஆண்டு 11 வரை வகுப்புக்களை கொண்டு இயங்கும் சைவத்தமிழ் வித்தியாசாலை கோப்பாய் வட்டாரத்தில் அமைந்துள்ள கனிஷ்ட வித்தியாலயங்களிற் பிரபலம் வாய்ந்தது எனலாம்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்றது வைரவிழா. வைரவிழா மலர் வெளியீடு சிறப்பம்சமாக இடம்பெற்றது. இப்பொழுது இடம்பெறுவது பவளவிழா, பவளவிழா மலர் சிறப்புடன் வெளிவருகின்றது.
உரும்பிராயின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்துள்ள உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தின் வியத்தகு முன்னேற்றத்துக்கு எல்லாம்வல்ல கற்பக விநாயகரின் திருவருளே காரணம் என்பது எமது நம்பிக்கை.
நன்றி- மூலம்-http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345