ஜெய்ப்பூர் நிறுவனம்

ஜெய்ப்பூர் நிறுவனம்யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு தசாப்தமாக செயற்கை அவயவம் பொருத்துதலில் முன்னோடியாகவும் மாற்று ஆற்றல் உள்ளவர்களுக்கு ஒரு ஆறுதலாகவும் ஜெய்ப்பூர் நிறுவனம் உள்ளது. அது மட்டுமல்லாமல் மாற்று ஆற்றல் உள்ளவர்களுக்கு நடமாடும் உபகரணங்கள், வாகனங்கள், கடன் திட்டங்கள், பயிற்சிகள், மற்றும் மாணவர்களுக்குரிய கல்விக்கு கடன் உதவிகளையும் வழங்கி வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 2000 ற்கு மேற்பட்ட மாற்றுஆற்றல் உள்ளவர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர். கால் இழப்பு, கை இழப்பு, போலியோ, பாரிசவாதம் என பல வகைகளில் அடங்குகின்றனர்.

75 வீதமானவர்கள் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இது சமூக சேவை நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு பிரச்சினையான காலப்பகுதியில் கூட சிறப்பாக தனது சேவையை வழங்கி இருந்தது.

இது போன்ற சமூக சேவை நிறுவனங்களை வளர்ப்பதன் மூலம் எம் சந்ததியில் உள்ள மாற்று ஆற்றலுள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்த உதவிகளை புரிவோமாக.

ஜெய்ப்பூர் நிறுவனம்

தொடர்புகளுக்குhttp://www.jjcdr.com/

Address: Jaffna Jaipur Centre for Disability Rehabilitation (JJCDR)
05, Old Park Road,
Jaffna,
Sri Lanka

Telephone: (+94) 21 – 2222574

E-mail: jaipurj@sltnet.lk

நன்றி – மூலம்http://www.jjcdr.com/இணையம்

Sharing is caring!

Add your review

12345