டாக்டர் தம்பு இராசையா

தம்பு, சின்னாச்சி ஆகியோருக்கு 21.07.1921 அன்று இராசையா பிறந்தார். இவர் ஆரம்பக்கல்வியை கொக்குவில் ஞானபண்டிதா் வித்தியாலயத்தில் கற்றார். பின்னர் சீனியர் கேம்பிறிட்ச் பரீட்சையில் சித்தியெய்தி கொழும்பு மருத்துவக்கல்லூரிக்குத் தெரிவுசெய்யப்பட்டார். 1950ம் ஆண்டு உதவி வைத்திய அதிகாரியாக பட்டம் பெற்றார்.

இவர் கொழும்பு அரசினர் தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் உதவி வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்தார். தொடர்ந்து பல இடங்களிலும் வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்தார். 1981ம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து மானிப்பாயில் மெடி எயிட் என்ற பெயரில் மருத்துவ நிலையமொன்றை ஆரம்பித்தார். தனது வீட்டிலும் மருத்துவ நிலையமொன்றை நடாத்திவந்தார்.

இலங்கை செங்சிலுவை சங்கம், மானிப்பாய் சுகாதார, சமூக சுற்றாடல் விவகாரசபை இந்துசமய அபிவிருத்திச்சபை ஆகியவற்றின் ஆயுட்கால உறுப்பினராக இருந்தார். 1988-1996 காலப்பகுதி வரை Lions கழக அங்கத்தவராக இருந்துவந்தார்.
இவர் 17-08-2002 அன்று அமரத்துவம் அடைந்தார்.

Sharing is caring!

Add your review

12345