திருகை

திருகை
பயறு உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பாக்குவதற்கோ அல்லது மாவாக்குவதற்கோ பயன்பட்ட வட்டவடிவில் அமைந்த மேலும் கீழும் இரு பாகங்களைக் கொண்ட கருங்கல்லினாலான சாதனம். இதன் மேற்பகுதியில் நடுவில் ஒரு துறை கரைப்பகுதியில் ஒரு துளை என இரு துளைகள் அமைந்திருந்கும். கீழ்ப்பகுதியில் நடுவில் ஒரு துளை அமைக்கப்பட்டிருக்கும். நடுவில் அமைந்திருக்கும் துளையானது இரும்புத்தண்டு ஒன்றின் மூலம் திருகையின் இரு பாகங்களையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்களை சிறிது சிறிதாக உள்நுழைப்பதற்கு ஏற்ற வகையில் கீழ்ப்பகுதியிலுள்ள துளையின் விட்டத்தைவிட மேற்பகுதியிலுள்ள துளையின் விட்டமானது சற்றுப் பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திருகையின் மேற்பகுதியை இலகுவாகக் சுழற்றுவதற்கு ஏற்றவகையில் கைபிடியாக தொழிற்படும் பொருட்டு மேலே அகன்றும் கீழே ஒடுங்கியுமிருக்கும் திருகையின் மேற்பகுதியின் கரையில் அமைந்திருக்கும் துளையில் இரும்புத்துண்டால் அல்லது மரக்கட்டையால் ஆன தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

திருகையின் மேற்பகுதியை ஓரிரு தடவைகள் சுழற்றினால் தானியங்களை பருப்பாக  மாற்றலாம் மாவாக்கவிரும்பின் பலதடவைகள் சுழற்ற வேண்டும். மேல் நடுப்பகுதியில் உள்ள துனையின் ஊடாக இடப்படும் தானியங்கள் சுழற்றும் போது அரைபட்டு இரு பாகங்களுக்கும் இடைப்பட்ட விளிம்பின் ஊடாக வெளியேறும். இதை சேகரிப்பதற்காக திருகையை ஒரு பை அல்லது மெழுகு / கடதாசி பேப்பரின் மேல் வைக்கப்படும். அரைபட்ட தானியங்கள் விரிக்கப்பட்ட தாளின் சேகரிக்கப்படும்.

அரைக்கப்படும் தன்மையை நன்றாக பேணுவதற்காக திரிகையில் பயன்படும் கருங்கல்லில் உலோக உளியால் சிறு சிறு பொழிவுகள் செய்யப்படும்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://jaffnaheritage.blogspot.com இணையம்.

Sharing is caring!

2 reviews on “திருகை”

  1. A.B.Costo says:

    it is a good think & try
    best wishes

  2. RAJA MURUGAN says:

    மிக நேர்த்தியான மற்றும் பயனுள்ள இணையதளம். உங்கள் தொகுப்பிற்கு சிரம் தாந்த நன்றிகள்

Add your review

12345