திரு.வைத்திலிங்கம் உபாத்தியார்.

இணுவில் தெற்கில் பிறந்தார். தந்தையார் அம்பிகை பாகரின் பெயரினை பிரகாசம் அடையச் செய்தவர். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றை கற்று பாண்டித்தியம் பெற்றார். பரராய சேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கு அடிமையானார். இக்கோயிலில் படிக்கும் புராண படணத்திற்கு உரை சொன்னார். சைவப்பிராகாச வித்தியா சாலைக்கு தலமையாசிரியராகவும் கடமையாற்றினார். கந்தசாமி ஆலயத்தின் மீது கல்யாண வேலவர் திருவூஞ்சல் பாடியவர். இவரிடம் கற்றவர் பலர் உயர்பதவிகளை அடைந்துள்ளனர். அயலில் வாழ்ந்த அந்தணச் சிறுவர்களிற்கு சமஸ்கிருதம் கற்பித்தார். இவருடைய சகோதரனான இளையதம்பி உபாத்தியாயர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார். இவருடைய திறமையும் பண்பும் இவரது கற்ற கல்வியை அணிசெய்தது என்றால் மிகையாகாது.

நன்றி : மூலம்- சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345