தி. ஞானசேகரன்

தி. ஞானசேகரன்

வாழ்க்கைக் குறிப்பு

ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட நிறைந்த அநுபவங்களே அவரது சிறுகதைகளாகவும், குறுநாவல்களாகவும், நாவல்களாகவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

இலக்கியப் படைப்புகள்

1960களிலிருந்து இற்றைய வரை எழுதி வரும் ஞானசேகரனது படைப்புகளில் 1977 இல் வெளிவந்த அவரது புதிய சுவடுகள் என்னும் நாவல் விதந்தோதத்தக்கது. அவரது குருதிமலை என்னும் நாவலும் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுதியும் பல்கலைக்கழகப் பாடநூல்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன. தமது படைப்பாற்றலால் பரிசில்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டவர், அவரது சிறுகதைகளும், குறு நாவல்களும், நாவல்களும் ஈழத்துப் புனைகதை உலகில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

இவரது நூல்கள்

கா. சிவத்தம்பி – இலக்கியமும் வாழ்க்கையும் (நேர்காணல்) – 2005
ஞானசேகரன் சிறுகதைகள் (சிறுகதைகள்) – 2005
அவுஸ்த்திரேலியப் பயணக்கதை (பயண இலக்கியம்)- 1999
புரிதலும் பகிர்தலும் (நேர்காணல்) – 1999
அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் (சிறுகதைகள்)- 1998
கவ்வாத்து (குறுநாவல்) – 1996
லயத்துச் சிறைகள் (நாவல்) – 1994
குருதிமலை (நாவல்) – 1979
புதிய சுவடுகள் (நாவல்) – 1977
காலதரிசனம் (சிறுகதைகள்) – 1973

By – Shutharsan.S

நன்றி : புன்னாலைக்கட்டுவன் இணையம்

Sharing is caring!

Add your review

12345