துலா

துலா
அன்றாட வாழ்க்கையை இலகுவாக்குவதற்கு எம்முன்னோர்களின் கண்டுபிடிப்பில் இதுவும் ஒன்றாகும். விவசாய தேவைக்காகவும் வீட்டுத் தேவைக்காகவும் நீரைப் பெற்றுக் கொள்வதற்காக கண்டறிந்த பொறியே துலா ஆகும். பெரும்பாலும் பூவரம் மரத்தால் அமைக்கப்பட்ட ஆடுகாலில் தென்னை அல்லது பனை மரத்தைச் சீவி செய்யப்பட்ட துலா பொருத்தப்படுகிறது. தமிழர் வாழ்வோடு ஒன்றிப்பிணைந்த இதுவும் இன்று மறக்கப்பட்டு விட்டது. எனினும் ஊர்ப்புறங்களில் இதை இன்றும் காணும் போது மெய் சிலிர்க்கும் சில நினைவுகள் மனதுள் பரவுகிறது. இதைவிட இந்த விவசாயம் என்பது கிணற்றில் இருந்து நீரை இறைப்பதன் மூலமே மேற்கொள்ளப்பட்டது.

அதிலும் இந்த விவசாய நிலங்களில் இருந்த கிணறுகள் மிகவும் ஆளமானவை. இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீரை விவசாய நிலத்துக்கு பாய்ச்சுவதற்கு துலா மூலம் அள்ளி ஊற்றுவது, சூத்திரப் பொறிமுறையை பயன்படுத்தி இறைப்பது என்ற இரண்டு வழிமுறைகள் கையாளப்பட்டன.
துலா மூலம் அள்ளி ஊற்றும் போது துலா கயிற்றை பிடித்து தண்ணீரை அள்ளி ஊற்றவதற்கு ஒருவரும் துலாவின் மேல் ஏறி நின்று முன்பின் அசைந்து (துலா மிதித்தல்) தண்ணீர் அள்ளுவதை இலகுவாகக் இருவரும் அதை பயிருக்கு வாய்க்கால் மடைகளை திறந்து பாய்ச்சவதற்கு ஒருவரும் என்று குறைந்த பட்சம் நான்கு பேர் தேவைப்பட்டார்கள். பொதுவாக அந்தக் காலகட்டத்தில் துலா மிதிக்கும் வேலையை பஞ்சமர்களே செய்தார்கள்.

நிலவுடமையாளர்கள் தாங்கள் நேரடியாக விவசாயம் செய்த நிலங்களில் இந்த துலா மதித்தல் என்பது அடிமை குடிமைகளின் கட்டயாய சேவை என்று பணிக்கப்பட்டிருந்து.

துலா

 

By -‘[googleplusauthor]’

 

Sharing is caring!

Add your review

12345