த.ஆனந்தமயில்

ஆனந்தமயில் அவரின் வெளியீடுகள் அதிகமாக வெளியிடப்படாவிட்டாலும் “ஓர் எழுதுவினைஞனின் டயறி” சிறுகதைத் தொகுப்பானது மிகவும் பிரபலமாகவும் வாழ்க்கையின் நெழிவு சுழிவுகளையும்  வெளிக்கொணரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சமதர்மம் நோக்கிய சமூக விடுதலையை அடிப்படையாக கொண்ட சிந்தனைகள் அவர் படைப்புகளின் அடிப்படையில் வேர் கொண்டுள்ளது. கடல் சார்ந்த கிராமிய நடைமுறைகள், நம்பிக்கை சார்ந்த பண்பாடுகள், சோகம் ததும்பும் கிராமியக் கதைகள் என அவர் படைப்புகள் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். மெல்லிதயம் கொண்டு நலிந்தோர் ஆதரவு அற்றோருக்கு உதவும் மனப்பாங்குடையவர்.

இவரின் படைப்புகளில் ஆழமான கருத்துக்கள் புதைந்திருக்கும்.

“விளக்கீடு”, “ஒற்றைக்கால் கோழி”, “முருகைக் கற்பூக்கள்”, “வாழும் வெளி”, “கொலுமீட்பு”, “காக்காச்சி கரிமகளே”, “ஒரு கட்டுமரம் காத்திருக்கிறது”, “விதி”, “கலை வந்தபோது”

எனப்பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

By – Shutharsan.S

தொடர்புடைய பதிவு

ஆனந்தமயில் ‘நினைவிலிருந்து சொற்களுக்கு’

Sharing is caring!

1 review on “த.ஆனந்தமயில்”

Add your review

12345