நடராசா சிவசுப்பிரமணியம்

நடராசா சிவசுப்பிரமணியம்நடராசா – புவனேஸ்வரி இருவருக்கும் மலேசியாவில் பிறந்தார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயின்று தமது பதினெட்டாவது வயதில் எழுதுவினையராக சேவையில் சேர்ந்தார். பின்னர் Accountancy பரீட்சைக்கும் தோன்றி அதிலும் சித்திபெற்றார். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கணக்காளராக 1958 தொடக்கம் கொழும்பு, காலி, கோண்டாவிலும் கடமையாற்றி பதவி உயர்வு பெற்று 1988-1990 வரை கோண்டாவில் இ.போ.சபையில் முகாமையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றார்.

1968.03.29இல் திருமணம் நடைபெற்று சுதுமலையில் குடியிருந்தார். சுதுமலை கிராமத்தின் முன்னேற்றத்திற்காக, அக்கிராமத்தில் உள்ள சமய, சமூக நிலையங்களில் பொறுப்பான பதவி வகித்து அதன் மூலம் தன்னாலான தொண்டுகளைச் செய்துள்ளார். வறுமைக்கோட்டின்கீழ் இருக்கும் மக்கள் பயன்பெறும்பொருட்டுப் பல செயற்றிட்டங்களை, அரிமா கழகத்தின் ஊடாக, அவர்களுக்குச் செய்தார். சுதுமலை இந்துசமய விருத்திச் சங்கத்தின் தலைவராகவும், முருக மூர்த்தி ஆலய பரிபாலன சபையில் தலைவராகவும் இருந்து அவற்றின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியுள்ளார். இந்து அபிவிருத்திச் சங்கத்தால் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்ட பாடசாலைக் கட்டடிடத்தை பூர்த்திசெய்வதற்கான பணம் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடமிருந்தும், வெளிநாட்டிலும், உள்ளூரிலும் உள்ள சில அன்பர்களிடமிருந்தும் பெருந்தொகையான நிதியுதவி அன்னாரின் பெருமுயற்சியினால் கிடைத்தன. தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த செம்மல் 2011.02.20 ம் நாளில் மண்ணீத்து இறைபதம் பெற்றார்.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345