நயினாதீவு மகா வித்தியாலயம்

இலவசக்கல்வியின் தற்தையாகிய திரு சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா அவர்களின் பெருமுயற்சியால் கிராமங்கள் பலவற்றில் அரசாங்க ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. நயினாதீவிலும் 1946 ஆம் ஆண்டு தைத்திங்கள் 17ஆம் நாள் 228 மாணவர்களுடன் ஒரு கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நிறுவப்பட்டது.  பல பெற்றோருடைய பெருமுயற்சிகளையும் அவர்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக நின்று ஊக்கமும் ஆக்கமும் தந்த சோ் வைத்தியலிங்கம் துரைச்சாமி அவர்களுடைய தூர சிருஸ்டியையும் அப்போது வடபகுதி கல்வி அதிகாரியாக இருந்த திரு வி. கே. நாதன் அவர்களுடைய உறுதுணையையும்  பெருமையோடு நினைவு கூரத்தக்கது.. சோ் வைத்தியலிங்கம் துரைச்சாமி அவர்கள்இ ஊர்காவற்றுறைத் தொகுதி அரசசபை உறுப்பினராகவும் சபாநாயகராகவும் இருந்து அளப்பரிய சேவையாற்றியுள்ளார். ஏனைய தீவுகளுக்கெல்லாம் தனித்தனி மகா வித்தியாலயங்கள் கொடுக்கப்பட்டு நயினாதீவு மட்டும் புறக்கணிக்கப்பட்டிருந்த வேளை அன்னார் தொலைபேசியில் யாழ்ப்பாணத்திலிருந்து கௌரவ கல்வி அமைச்சர் திருஐ சி. டபிள்யு கன்னங்கரா அவர்களுடன் தொடர்பு கொண்டு  ஒரு கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நிறுவ அனுமதி பெற்றுத் தந்தார். பாடசாலைக்கான கட்டடமோ நிலமோ இல்லாத போதிலும் முதலாம் வட்டாரத்திலிருந்த திரு மாரிமுத்து அவர்களின் யாத்திரிகர்களுக்கென அமைக்கப்பட்ட மடத்தில்  கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலை நயினையிலுள்ளோர் காணக் கண்குளிர கால் கோள் பெற்றது. ஒரு வருட காலம் வரை மேற்படி மடத்தில் இயங்கி வந்த பாடசாலை பெற்றோரின் தளராத உழைப்பினால் 1947 ஆம் ஆண்டு புதுப்பொலிவுடன் சொந்தமான ஒரு தற்காலிக அமைப்பிலே புதுமணம் பரப்பியது. இந்தப் புதிய இருப்பிடம்திற்கு தளராத மனத்தோடு காணி நிலம் தந்துதவிய கிறிஸ்தவ சமய நிறுவனத்தின் ஒப்பு அரிய பணிக்குரியது. புதிய இருப்பிடத்தில் அமைந்த பாடசாலைக்கான தற்காலிக இருக்கையை பெற்றோர்களே அமைத்துக் கொடுத்தார்கள். இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசாங்கக் கனிஸ்ட பாடசாலையாகவும் பின்னர் சிரேஸ;ட பாடசாலையாகவும் அதன் பின்னர் மகா வித்தியாலயமாகவும் தரமுயர்த்தப்பட்டது. ஆரம்பத்தில் பாடசாலையில் தற்காலிக அதிபராக திரு எஸ். அரசன் அவர்கள் பதவியேற்றார். பின்னர் 12.02.1946 தொடக்கம் நிரந்தர அதிபராக திரு எஸ். கந்தப்பு அவர்கள் பதவியேற்றார். இவர் 7 ஆண்டுகள் கடமையாற்றினார். பாடசாலை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து பிறருக்காக வாழ்ந்து உறக்கமும் காணாது உழைத்து கருமமே கண்ணாயிருந்து நயினையின் மதிப்பிற்குரிய பெரியவராய் வாழ்ந்து சபையிலே மக்களை கவந்திழுக்கச் செய்தார் அன்று சுயமொழியில் சிரேஸ்ட பாடசாலைத் தரத்தி்லிருந்து பல மாணவர்களை குறுகிய காலத்தில் ஆங்கில மொழி மூலம் பயிற்றுவிக்க ஆவண செய்து ஆக்கமும் ஊக்கமும் தந்தார். ஆங்கிலக் கல்வியின் பொருட்டு அன்றைய ஆசிரியர்கள் எடுத்த முயற்சி இங்கு குறிப்பிடத்தக்கது. பாடசாலையைத் தரிசித்த மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் பலவற்றையும் பதிவுப் புத்தகத்தில் காணலாம். திரு எஸ். கந்தப்பு அவர்களைத் தொடர்ந்து திரு வி. சண்முகம் அவர்கள் நான்கரை ஆண்டுகளும்இ திரு ரி. கனகரெத்தினம் அவர்கள் ஏழு ஆண்டுகளும்இ திரு சபா ஆனந்தா நான்கு வருடங்களும் அதிபர்களாகக் கடமையாற்றினர். முன்னைய அதிபர் விட்ட பணியை சிரமேற் கொண்டு இவர்கள் செயற்பட்டனர். இவர்களுடைய காலத்தில் நிரந்தரக் கட்டமைப்புக்களும்இ வகுப்பறை வசதிகளும் உண்டாயின. திரு சண்முகம் அவர்களின் காலம் தொட்டு பாடசாலை இரு நேரப் பாடசாiலயாக அமைக்கப்பட்டு நேரசூசியும் அமைக்கப்பட்டது. விஞ்ஞானக்கல்வி அவசியம் பெற்றோரினால் உணரப்பட்ட போதிலும் கனகரெத்தினம் அவர்களுடைய காலத்தில் தான் கைகூடியது. அவர் ஒரு விஞ்ஞானப் பட்டடதாரியாக இருந்தமையினால் அன்னார் பாடசாலையில் அதிபராக நியமனம் பெற்றமை விஞ்ஞானக் கல்வியைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஏற்படுத்தியது. மாணவர்களுடைய ஆர்வமும் பெற்றோர்களுடைய ஊக்கமும் இத்துறையில் அவருக்குக் கிடைத்தமையினால் அரசிடமிருந்து உபகரணங்களையும் விஞ்ஞானக் கணித ஆசிரியர்களையும் பெறக் கூடியதாகவிருந்தது. பல மாணவர்கள் திரு கனகரெத்தினம் அவர்களுடைய காலத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்று இன்று அத்துறையில் முன்னோடியாகத் திகழ்கின்றனர். எனினும் விஞ்ஞானக் கல்வியில் இப் பாடசாலை பூரணத்துவம் அடைந்துவிட்டதென்று சொல்லுவதற்கில்லை. ஆசிரியர் பற்றாக்குறை ஆரம்ப காலந் தொடக்கமே இருந்து வருவது சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இக்காலப் பகுதியில் விவசாயம் மகா வித்தியாலயத்தில் முக்கிய பாடமாகப் புகுத்தப்பட்டது. ஆரம்பத்தில் 1 – 10 வகுப்புக்கள் வரையும் பின்னர் 6 – 10 வகுப்புக்கள் வரையும் அதன் பின்னர் 6 – 12 ஆம் வகுப்பு வரையுமுடைய பாடசாலையாக வளர்ந்து வருகின்றது. தற்போது க.பொ. த(உயர் தர) கலைஇ வர்த்தக வகுப்புக்களை உள்ளடக்கிய 1ஊ பாடசாலையாக உள்ளது. திரு கனகரெத்தினத்துக்கு பின் திரு கோ. சபானந்தா அவர்கள் 4 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றினார். இவர் பல ஆண்டுகள் அதிபராக இருந்து பெரிய கல்லூரிகளில் ஆற்றிய பணிகளை கல்வி உலகு நன்கு அறியும். இவருடைய காலத்தில் பாடசாலை எழிலும் திருவும் பெற்றதெனலாம். இன்றிருக்கின்ற அழகுத் தோற்றத்திற்கு அன்னாரே முதலில் வழிவகுத்தார். இவருடைய காலத்தில் வர்த்தகக் கல்வி ஆரம்பிக்கப்பட்டது. நயினை மகா வித்தியாலயத்தில் வர்த்தகக் கல்வி ஆரம்பிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் நயினை மாணவர் பலர் சோ்ந்து பயிற்சி பெற்றுப் பயனைப் பெற்றனர் என்பதை நாம் சொல்லி அறிய வேண்டியதில்லை. நாடேயறியும். இன்று வர்த்தக ஆசிரியர்களாகவும்இ சுருக்கெழுத்தாளர்களாகவும் பலர் பணியாற்றுகின்றனர். இக் கல்லூரியில் வர்த்தகத்துறை தோன்றியமை இவ் ஊர் மாணவரின் ஆற்றலுக்கு முடி வைத்தாற் போல் அமைந்தது. திரு ஆனந்தா அவர்களுக்குப் பின் திரு வே. விஸ்வலிங்கம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். பல ஆண்டுகளாக பாடசாலையில் தலைமையை ஏற்று நடத்திய அவருக்கு பல்துறை அனுபவங்கள் உண்டு. முக்கியமாக நிர்வாகத்துறை அவரின் வருகைக்குப் பின்னர் புது மெருகு பெற்றது. அத்துடன் கல்வியில் உள்ள அக்கறையும் பாடசாலையின் புனிதத்தைப் பேணுவதில் அவருக்குள்ள பற்றும் எமது பாடசாலையை ஓர் ஆலயமாக்கிவிட்டதென்றே சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் பலதுறைகளிலும் பாடசாலை வளர்ச்சி கண்டுள்ளது கடந்த சில வருடங்களாக நயினை மகா வித்தியாலயம் பெற்றுள்ள சிறந்த பரீட்சைப் பெறுபேறுகள் அவருடைய அயராத முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும். முன்னரே சிறப்புடன் இயங்கி வந்த வர்த்தகத்துறை மேலும் சிறப்புடையதாக அகில இலங்iகயிலே முதன்மை பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்துள்ளது. 1973 ஆம் ஆண்டு செல்வன் கு. குணசிங்கம் என்பவர் வர்த்தகப் பிரிவில் 5 விசேட சித்திகள் பெற்று க.பொ. சாதாரண தர சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்கு வர்த்தக மன்றம் தனது கன்னி வெளியீடாக 1974 ஆம் ஆண்டு “வணிக தாரகை” என்ற சஞ்சிகையை வெளியிட்டமை இங்கு பெருமையோடு குறிப்பிடுகின்றனர். திரு வே. விஸ்வலிங்கம் அவர்கள் 12.07.1978 வரை அதிபராகக் கடமையாற்றினார். தற்போதைய அதிபராக எஸ்.குகனேசன் கடமையாற்றுகிறார்.

நன்றி : நயினாதீவு மகா வித்தியாலய இணையம்

மேலதிக விபரங்களுக்கு நயினாதீவு மகா வித்தியாலயம்

Sharing is caring!

Add your review

12345