நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

சொல்லென்ற மலரிலே பொருளென்ற புதுமதுச் சொட்டிச் சுரக்குமமிர்த சுரபியாய் ஒளிர்ந்து, ஈழநாடு பெருமை கொள்ள, இரசிக உலகம் வாயூற ஆயிரம் பதினாயிரம் கவிதைகளால் தமிழன்னையை அலங்கரித்த பெருமைக்குரியவர்தான் தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப்புலவர். அவரது

ஆடிப்பிறப்பையும், கத்தரி வெருளியையும், படிக்காத இளம் மாணவர்களையும், அதிரவரு மாணிக்க கங்கையாறு பாயும் இலங்கை வளத்தைக் கேட்காத தமிழ் மகனையும், பனைமரக் கும்மியையும், தாலவிலாசத்தையும் பார்த்து வாயூறாத ரசிகனையும் இந்த நாட்டிற் காண முடியாது. ஏறாத மேடும், தாயாட்டின் கதறலும், இலவுகாத்த கிளியும் எங்கள் புலவர் ஈர்ந்த அரும்பெரும் நிதியங்கள். அன்னநடை பிடியினடை என்ற ஆறுமுக நாவலர் பாடலும், தளர்விலாத் தொண்டு செய்தமைக்காக சூட்டிய “தாரமாய்த் தாயானாள் கை” யும் அவர் நமக்குத் தந்த முது சொத்துக்கள். நாமகள் புகழ் மாலையும், கதிரைச் சிலேடை வெண் பாவும், தந்தையார் பதிற்றுப் பத்தும், மரதன் ஓட்டமும், மருதடி விநாயகர் பாமாலையும், சூரியன் துதியும், சுகாதாரக் கும்மியும், சாவித்திரி கதையும், உயிரிழங்குமரன்

நாடகமும் அவர் ஆண்டாண்டாய் அனுபவிக்கத் தந்த செல்வங்கள்.

Sharing is caring!

1 review on “நவாலியூர் சோமசுந்தரப்புலவர்”

Add your review

12345