நாகமணிபுலவர்

நாகமணிபுலவர்இவர் நயினாதீவிலே சாலிவாகள சகாப்த்தம் கஅகரு-க்கும் கிறீஸ்தாப்தம் கஅகூக-க்குஞ் சரியான விக்கிரம வருடம் மார்கழி மாதம் க0 திகதியில் பிறந்தார்.வீரகத்தி பிள்ளையால் நடாத்தப்பட்ட திண்ணைப்பாடசாலையில் ஆரம்ப கல்வியினை தொடர்தார். அதன் பின்னர் தில்லையம்பல வித்தியாலயம் எனும் சைவபாடசாலையில் சோமசுந்தர ஐயரிடம் சில இலக்கண நூல்களையும் கற்றார். இதன்பின்னர் யாழ்ப்பாண வணிகர்களிற்கு கணக்கெழுதும் தொழிலில் அமர்ந்தார். பின்னர் இதனை விடுத்து நயினாதீவில் கிராமசபைத் தலைவராக கடமையாற்றினார். இக் காலப்பகுதியில் நயினை நீரோட்டயமகவந்தாதியும், நயினை மாண்பியமும் இவரால் இயற்றப்பட்டது. மிகவும் இலக்கண செறிவும் புலவரின் புகழை பரப்பியவையும் இன்னூல்கள் என்றால் மிகையாகாது.
புலவர் கிராமசபைத் தலைவராக கடமையாற்றிய காலத்தில் தற்போது நயினாதீவில் சந்தையடி என்று அழைக்கப்படும் இடத்தில் புலவர்அவர்களாலே சந்தை ஒன்று உருவாக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இவ்விடத்தில் இரண்டு ஆலமரங்கள் இருந்துள்ளன. இவ்விடத்தினை அக்காலத்தில் இரட்டை ஆலடி எனவும் அழைப்பர். தற்போது இவ் மரங்கள் அவ்விடங்களில் இல்லை என்பதும் இங்கு மனங்கொள்ளதக்கது. தற்போது சந்தையும் அவ்விடத்தில் இல்லை ஆனாலும் அவ்விடம் தற்போதும் சந்தையடி என்றே அழைக்கப்படுகிறது.
மிகவும் நகைச்சுவையாக பேசுவதில் நாகமணிபுலவர் வல்லவர். ஒரு முறை யாழ்ப்பாணத்தில் கணக்கெழுதும் வேலைபார்த்துக்கொண்டிருக்கையில் V.S.S.K சுருட்டு மிகவும் பிரபல்யமான சுருட்டாக விளங்கியது. இவ்சுருட்டின் மகிமை இந்தியாவிற்குகூட பரவியிருந்தது. இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த குழுவினரில் ஒருவர் புலவரை V.S.S.K சுருட்டு இருக்கிறதா என்று மிகவும் விரைவாக ஆங்கிலத்தில் கேட்டார் அப்போது புலவர் வேடிக்கையாக என்ன வேசை சுருட்டோ என்று நகைச்சுவையாக கேட்டார் அப்போது அவர் வேசைக்கும் சுருட்டுக்கும் என்ன தொடர்பு என்று வினாவினார். உடனே புலவர் வேசைக்கும் சுருட்டுக்கும் உள்ள தொடர்பினை சிலேடை கவிமூலம் கூறினார். அப்பாடல் வருமாறு

எட்டிப் பிடித்தலால் ஏந்தி முத்தமிடுவதால்
கட்டவிழ்த் திகழ்வாயிற் கவ்வுவதலால்-மட்டற்ற
ஆசைத்தீ மூட்டுதலால் ஆள புகைச்சுருட்டை
வேசைப் பெண் என்றேன் விரை.

முதல் சுருட்டுக்கு எனப்பார்த்தால் சுருட்டை கேட்பவர் அதனை விற்பவரிடமிருந்து எட்டிப்பிடித்து வாங்குவார் பின்னர் அதனை கையில் பிடித்து அதன் மணத்தினை மோந்து இரசிப்பர். பின்னர் சுருட்டு கட்டு ஒன்றை பிரித்து ஒரு சுருட்டை தமது இதழ்களில் வைத்துக்கொள்வர். பின்னர் தீப்பெட்டியினை எடுத்து பற்றவைப்பர்.
இனி வேசைக்கு எனப்பார்த்தால் வேசையிடம் செல்பவர்கள் முதலில் அவளை எட்டிப்பிடிப்பர். பின்னர் அணைத்து முத்தமிடுவர் பின்னர் கட்டவிழ்த்து அதர பானம் பருகுவர். இதன் பின்னர் காமவசப்பட்டு பரத்தையுடன் சல்லாபிப்பார்.
சுருட்டிலும் காசு கரியாகிறது வேசையின் இன்பத்திலும் காசு கரியாகிறது.
பலகாலமாக நரஸ்துதிபாடிய புலவர் பின்னாளிலே தன்னை பெரும் புலவனாக ஈழமணி நாட்டிலே காட்டுவதற்காக இலக்கண தன்மை பொருந்திய பாடல்களை பாடியுள்ளார்.
நயினாதீவு வைத்தியசாலைக்கு முன்புள்ள வீடே புலவரின் வீடாகும் இதனை இன்றும் புலவர் வளவு என்றே அழைக்கின்றனர்.
புலவர் அவர்கள் 19 ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

By – Shutharsan.S

ஆதாரம் நயினை மாண்பியம்

Sharing is caring!

Add your review

12345