நா.சுப்பிரமணிய ஜயர்

பல்கலைக்கழக ஆசிரியர்களுள் ஒருவராக விளங்குபவர் பேராசிரியர் நாகராஜ ஜயர் சுப்பிரமணியம். இவர் 25.12.1942 இல் முல்லைத்தீவைச் சேர்ந்த முள்ளியவளைக் கிராமத்தில் பிறந்தார். திருமணத்தின் மூலம் தெல்லிப்பளை இவரது புகுந்த இடமாக உள்ளது.

இவரது குடும்பமும் இளமைக்கால வாழ்வும் கோயில் சார்ந்தனவாக அமைந்தன. இதனால் புராணபடனம், பாராயணம் இவரை புராணங்களிலும் திருமுறைகளிலும் ஆட்சியுடையவராக்கின. இதனாற் சைவசித்தாந்த சாஸ்திரங்கள், பகவத்கீதை, திருக்குறள் முதலியவற்றிலும் புலமை மிக்கவராக விளங்குகிறார். சோதிடகலையிலும் இவர் வல்லவராக வியங்கியதோடு சோதிட மன்றத்;தின் தலைவராக விளங்குகின்றார். இளமையில் மரபு நிலைப்பட்ட அறிவுத் துறைகளில் ஈடுபட்டவராக இருந்தபோதிலும் அவருக்கேயுரிய புதுமை நாட்டம் நாவல், சிறுகதை முதலான நவீன துறைகளிலும் ஈடுபட வைத்தது இவற்றால் அவர் பன்முக ஆளுமையுடையவராக விளங்குகிறார்.
கொழும்பு, பேராதனை பல்கலைகழகங்களில் பயின்று 1969ல் தமிழில் சிறப்பு கலைமானிப் பட்டம் பெற்றாh. 1970ம் ஆண்டு தொடக்கம் இவற்றைப் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக பதவி பெற்றார். அக்காலத்தில் “ஈழத்துத் தமிழ் நாவல்கள்” என்னும் தலைப்பில் மேற்கொண்ட ஆய்விற்காக கலை முதல்வர் (எம்.எ) பட்டம் பெற்றார். இவ்ஆய்வேடு ஈழத்துத்தமிழ்நாவல் என்ற பெயரில் முத்தம் வெளியீட்டு கழகத்தால் 1979ல் வெளியிடப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் குறிஞ்சிக்குமரன்மீது ஆற்றுப்படை பாடித் தங்கப்பதக்க பரிசில் பெற்றார். இது கவிதைத் துறையில் இவர் கொண்டுள்ள ஈடுபாட்டுக்குச் சான்றாகும். 1985ல் “தமிழ் யாப்பு வளர்ச்சி” என்ற ஆய்வேட்டை யாழ்ப்பானப் பல்கழைக்கழகத்தில் சமர்ப்பித்து கலாநிதி பட்டம் பெற்றார்.
1978ல் யாழ்ப்பான வழாகத் தமிழ்த்துறையில் துணைவிரிவுரையாளராக பதவியேற்றார். பின்னர் பதவியுயர்வு பெற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 1995 இணை பேராசிரியரானார். 1997-1998ம் ஆண்டுகளில் தமிழ்த்துறை தலைவர்களாக பணியாற்றினார். இப்போதும் யாழ்பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பதவி வகிக்கிறார்.
பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம், சமயம், தத்துவம், யாப்பியல், அண்யியல், திறனாய்வு, ஈழத்துத்தமிழ் இலக்கியம் என்பவற்றில் ஈடுபாடு கொண்டுள்ளார். எழுத்துத்துறையிலும், பேச்சுதுறையிலும் இவர் சிறப்புடன் விளங்குகிறார்.
இந்திய சிந்தனை;;;;;;;;;;;;;;;;;;’ மரபு என்ற நூலை இவர்தம் துணைவியாரோடு இணைந்து எழுதியுள்ளார்; தமிழகத்தில் வெளியிடப்படட இந்நூல் ஈழத்திலும் தமிழகத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நூலில் திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 1996ல் சிறப்பான வடிவில் தமிழகத்தில் வெளிவந்துள்ளது.
ஆய்வுக்கட்டுரை எழுதுவதில் சிறந்து விளங்கும் இவர் இருபதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றுள் பல ஆய்வரங்களிலும் வாசிக்கப்பட்டன. அனைத்துலக தமிழாராச்சி மாநாடுகள் (யாழ்ப்பாணம் 1974, மதுரை 1971) அனைத்துலக இந்;து மாநாடு (கொழும்பு 1982), மொழியியல் பண்பாட்டு ஆய்வரங்கு (புதுச்சேரி 1992) ஞாலத்தமிழ் மாநாடு (மதுரைப் பல்கலைக்கழகம் 1992) பாரதி ஆய்வக கருத்தரங்கு (காந்தி கிராமம் பல்கலைக்கழகம் திண்டுக்கல் 1993) முதலியன இவர் கலந்து கொண்ட உயர்நிலை மாநாடுகள். சென்னையிலுள்ள உலகத்தமிழாராச்சி ஆய்வரங்குகள் பலவற்றிலும் இவர் பங்குபற்றியுள்ளார். சமயச் சொற்பொழிவு துறையிலும் 1999-2000 இவரைப்பற்றி “கவின்கலைக்கோர்
கலாகேசரி” எனும் நூலை இரசிகமணி கனக செந்திநூதன் வெளியிட்டுள்ளார்.

Sharing is caring!

Add your review

12345