நுணசை முருகமூர்த்தி கோயில்

கீரிமலையிலிருந்து 3 மைல் தூரத்தில் நுணசை ஆலயம் அமைந்துள்ளது. மாதகல் துறைக்கு அண்மையில் அமைந்துள்ளது ஆலயத்தை சூழ வயல் நிலங்கள் உள்ளன. நுணா மரங்கள் சோலை மத்தியில் கடம்பமரம் ஆதியிலே உண்டாகியது. கடம்பனை மூர்த்தியாகக்கொண்டு வேலை அடிமரத்தடியில் பிரதிஸ்டை செய்துபொங்கல் பூஜைசெய்து வழிபட்டு வந்தனர். நுணாமரங்களின் மரபுவழி நுணசை என்று இந்தக் கோயிலுக்கு காரணமாயிற்று. கடம்பன் பக்கத்தில் 7குன்றுகள் ஆழமாக இருக்கின்றன. சப்தகன்னியர்கள் இவ் 7 குன்றுகளிலும் நீராடி உச்சிப்பொழுதில் கடம்பனை வழிபட்டனர் என்பது ஜதீகம் ‘மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாக வணங்கினார்க்கு ஓர் வார்த்தை சொல்ல சர்க்குருவும் வாய்க்கு பராபரமே.” இது தாயுமானவர் வாக்கு இங்கு மூர்த்தி கடம்பமரம் தீர்தம் இந்தமூண்றினாலும் சிறப்பாக அமைந்தது. காஞ்சியில் மாமரம்போல கடம்பு நுணசைக்கு தவவிருட்சமாக அமைந்தது. செங்கடம்பு கடம்பு முருகனுக்கு மாலையாக சாத்தி வழிபட்டனர். வருடா வருடம் திருவிழா நடைபெற்று சித்திரா பூரணை அன்று தீர்த்த உற்சவமும் நடைபெறும்.

நன்றி : படங்கள் – எஸ் சுசாகரன்

Sharing is caring!

Add your review

12345