[:ta]நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார்[:en]Nediyakadu Thirusittampala Pillaiyar[:]

நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலானது 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது கோவிலின் தெற்கு வீதியில் அமைந்துள்ள மடத்தில் வைரவர் என்னும் ஒரு ஆசார சீலரால் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து வணங்கி வந்தனர்.
சிலகாலங்களில் வேதாரணியத்தில் இருந்து கணபதி ஐயர் என்ற பெயருடைய ஒரு சைவக்குருக்களை அழைத்து வந்து பூசைகள் செய்து வந்தனர். அவருடைய காலத்திற்குப் பின்பு அவருடைய மகன் சிவஸ்ரீ தியாகராஜக்குருக்கள் பூசைகள் செய்து வந்தார்.
அக்காலங்களில் கப்பல் வாணிபம் தொடங்கப்பட்டு செவ்வனே நடந்து வந்ததால் தொழில் சம்பந்தப்பட்ட எல்லோரிடமிருந்தும் மகமைகள் வசூலிக்கப்பட்டு கோயில்களுக்குச் சேர்க்கப்பட்டு வந்தன. 01.02.1846ல் பிரசித்த நொத்தாரிசு கே.கணபதிப்பிள்ளை முன்னிலையில் எழுதப்பட்ட உறுதியாலும் மகமைத் தொகையில் என்ன விழுக்காடு நெடியகாடு பிள்ளையாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற விபரம் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கின்றது. இவ்வுறுதிகளை ஊரில் உள்ள பல பெரியவர்கள் முன்னின்று முடித்துக் கொடுத்திருக்கின்றார்கள்.
மகமைகள் வசூலிப்பதும் செலவு செய்வதும் பெரியார் திருமேனியார் வெங்கடாசபிள்ளை உட்பட ஐவர் கொண்ட குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிள்ளையார் கோவிலுக்கு ஆறுமுகம் முருகுப்பிள்ளை என்னும் பெரியார் மணியமாக இருந்தார்.
பூங்காவனம் 1938
அப்போது 1867ல் சிவன்கோவில் சங்குத்தாபனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளில் திரு.வெங்கடாசபிள்ளை சிவன் கோவிலோடு ஒன்றிவிட்டமையால் அவர் மற்றைய கோவில் வேலைகளிலிருந்து விலகிவிட கந்த குட்டியார் வேலுப்பிள்ளை என்னும் சைவ ஆசாரசீலர் பிள்ளையார் கோவில் மேற்பார்வையாளர் ஆனார். இவர் பிள்ளையாரை முடிந்தவரை ஆகம விதிப்படி அமைந்த கோவிலில் எழுந்தருளச்செய்ய வேண்டுமென உறுதி பூண்டார்
சிறிதுசிறிதாக மூலவரை அமைத்து தம்பமண்டபம் மதில் முதலியவற்றை அமைத்து 1884 ல் குடமுழுக்கு செய்வித்தார்கள்.
By – Shutharsan.S
நன்றி -http://nediyakadu.com இணையம்[:]