நெடியகாடு மோர்மடம்

நெடியகாடு மோர்மடம்வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலின் தென்மேற்கு மூலையில் அமைந்திருக்கும் மண்டபத்தை அனைவரும் மோர்மடம் என்றே அழைப்பார்கள். இந்த நெடியகாடு மோர்மடம் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலில் நடைபெறும் உற்சவங்களின்போது விநாயகப் பெருமானுக்கு நிறைகுடம் வைத்து ஆராதனை செய்வது வழக்கமாகும்.

அத்தோடு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோவிலிற்கு, வல்வையில் வருடாந்த உற்சவங்கள் நடைபெறுகின்ற அனைத்து கோவில்களின் உற்சவ மூர்த்திகளும் வந்திருந்து செல்வதும் வழமையாகும்.

அப்படி வருகின்ற உற்சவ மூர்த்திகளுக்கு நிறைகுடம், மண்டகப்படி வைத்து ஆராதனை செய்வதும் வளக்கமாகும்.

அந்தவகையில்:-

மாசி மாதப்பௌர்ணமி நாளில் புட்டணிப்பிள்ளையார் தீர்த்தத்திருவிழா.

பங்குனிமாதம் வல்வை வைத்தீஸ்வரன் கோவில் கொடியேற்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரும் மாணிக்கவாசகர் ஊர்வலம்.

வல்வை வைத்தீஸ்வரனின் திருவிழாவின் பதின்மூன்றாம் நாள் பிச்சாண்டித் திருவிழா.

பங்குனி மாதப்பௌர்ணமி நாளில் வல்வை வைத்தீஸ்வரன் கோவில் தீர்தத் திருவிழா.

சித்திரைமாதம் வல்வை முத்துமாரிஅம்மன் கோவில் கொடியேற்றத் திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரும் காத்திலிங்கசாமி ஊர்வலம்.

வல்வை முத்துமாரிஅம்மன் கோவில் திருவிழாக் காலத்தில் எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழா.

சித்திரா பௌர்ணமி (இந்திரவிழா) அன்று வல்வை முத்துமாரி அம்மன் தீர்தத்திருவிழா.

வைகாசி மாதம் வேவில் வீரகத்திப் பிள்ளையார் கோவில் கொடியேற்றத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பியாண்டார் நம்பி ஊர்வலம்.

வைகாசிப் பௌர்ணமி அன்று வேவில் வீரகத்தி பிள்ளையாரின் தீர்தத்திருவிழா

 
By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம்http://nediyakadu.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345