நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்

இப்பாடசாலை வடமராட்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆரம்ப காலங்களில் ஆங்கில நெறி பாடசாலைகள் இருந்த காலத்தில் தமிழ் நெறி மூலமாக 1921 ம் ஆண்டளவில் இப்பாடசாலை உருவாக்கப்பட்டது. 1946 ம் ஆண்டு காலப்பகுதியில் கல்வி அமைச்சராக இருந்த சி. டபிள்யு. டபிள்யு கன்னங்கரா அவர்களால் பாடசாலைகள் தரமுயர்த்தல் செயற்திட்டத்தால் இப்பாடசாலையும் தரமுயர்த்தப்பட்டு நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமாக அழைக்கப்பட்டது. இத்திட்டத்தில் இலங்கை முழுவதுமாக 54 பாடசாலைகள்
தரமுயர்த்தப்பட்டன. இப்பாடசாலையில் ஆண், பெண்களுக்குரிய தனியான தங்குமிட வசதி, விவசாய விலங்கு வளர்ப்புக்குரிய பகுதி, விளையாட்டு மைதானம், விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன உள்ளது. 1987 காலப்பகுதியில் அசாதாரண யுத்த சூழ்நிலையால் பௌதீக வளங்கள் பாதிப்படைந்தன. எனினும் தற்போது புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு மிகச் சிறந்த கல்வி நெறியினை வழங்கிக் கொண்டுவருகிறது.
நன்றி : நெல்லியடி மகா வித்தியாலய இணையம்
மேலதிக விபரங்களுக்கு :

> Nelliyady Madya Maha Vidyalayam

Sharing is caring!

1 review on “நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்”

Add your review

12345