பகிர்

நெடுந்தீவின் விசேடங்களில் ஒன்று, தீவை அழகுபடுத்தும் கற்களால் கட்டப்பட்டு அரண் செய்யும் பகிர் என அழைக்கப்படும் கல் வேலிகளாகும். இவற்றை இலங்கையில் வேறெங்கும் தொடராகக் காணமுடியாது. நெடுந்தீவிலுள்ள சகல கமக்காணிகளும், வீட்டுக்காணிகளும் (சில வீட்டு மதில்களைக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்). சிறிய கற்களை அத்திவாரமாக அடுக்கி அவற்றின் மேல் பெரிய கற்களை அளவிற்கேற்ப முதலில் அடுக்கி பின்னர் சிறிய கற்களை மேல் நோக்கி ஒன்றன் மேல் ஒன்றாகப் படிப்படியாக அடுக்குவார்கள். சிலர் இவற்றுக்கு மேலாகப் பனை ஓலைகள் வைத்து அடைத்துமிருப்பார்கள். இவற்றுக்கு வாசலில் கதவுகள் போட்டிருப்பார்கள். கமக்காணிகளுக்கு, இரண்டு பனம் துண்டங்களைக் கொண்டு ஆட்கள் மட்டும் நுழையக்கூடியதாக ஆங்கில எழுத்து வி வடிவத்தில் வழியமைத்திருப்பார்கள். இவற்றைப் பழந்துண்டங்களைக் கொண்டே பெரும்பாலும் அமைத்திருப்பார்கள். இதனால் இவற்றைக் கொடுப்பனையென அழைப்பார்கள். கடவை என்றும் அழைப்பர்.

Sharing is caring!

Add your review

12345