பசுவும் புலியும் கிராமத்து விளையாட்டு

பசுவும் புலியும் கிராமத்து விளையாட்டு ஆனது இருவர் விளையாடல் முக்கோணமாகக் கோடு கீறி உச்சியிலிருந்து அடித்தளத்தை முட்ட இரு கோடுகள் வரைந்து குறுக்காக மூன்று கோடுகள் வரைந்து முக்கோணத்துக்கு வெளியே ஒவ்வொரு கோட்டினால் மூட வேண்டும்.
புலியாக விளையாடுபவர் 3 அளவான கல்லை அல்லது ஏதாவது ஒரு உருண்டோடாத பொருளை வைத்தல் வேண்டும். காய்களை ஒரு இடத்துக்கு மட்டுமே நகர்த்தலாம். புலிகள் பசுக்களைக் கலைத்தும் பிடிக்க வேண்டும். பசுக்கள் பிடிபடாமல் ஓடி ஓடித் தம்மைப் பாதுகாத்தும் புலியை அடைத்தும் விளையாட வேண்டும். இரு பகுதிகளும் புத்திநுட்பத்தோடு மூளையை உபயோகித்து விளையாடுவர். இது அவரவர் தம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உறுதியை வளர்க்கும். திண்ணைகளில், விறாந்தைகளிலும் விளையாடலாம்.
இதுபோன்ற வேறு சில விளையாட்டுக்களும் உண்டு. சோகி போட்டுத் தாயம் விளையாடல், சொல்லுக் கட்டுதல், எண் விளையாட்டுகள், தக்கினி குலுக்கல் (இது கடற்கரையில் காணப்படும் ஒரு உருளைக் கல்லின் பாதிபோல் அடி தட்டையாக இருக்கும்), தாப்பாய், குருசு விளையாடுதல், ஓராங்கோடு கெந்தி விளையாடல் (மாங்கொட்டை அல்லது கடற்கரையில் அகப்படும் ஒரு பிறவுண் நிறக் கொட்டையில்) சிறு சோறு சமைத்தல், குண்டப்பம் சுடுதல், குழை போடுதல், கண்கட்டிப் பிடித்தல் எனப் பலப்பல.

By -‘[googleplusauthor]’

Sharing is caring!

Add your review

12345