பண்டிதர் வித்துவான் .இ.திருநாவுக்கரசு

ஈழத்து திருவாரூர் என அழைக்கப்படும் இணுவில் பகுதியிலே வாழ்ந்த புலவர்களுள் இவரும் ஒருவராவர். சமீபத்திலே அமரத்துவம் அடைந்த இவரும் கற்றோர் மத்தியில் ஒருவராவார். இராமுப்பிள்ளை பத்தினிப் பிள்ளை ஆகிய தம்பதியினருக்கு மூன்றாவது புத்திரனாக 17.03.1923 இல் வந்து அவதரித்தார். இவர் க.வைத்தியலிங்கப் பிள்ளை, கா.தம்பையா முதலியவரிடம் கல்வி கற்றார். 1944 இல் ஆசிரியராக வெளிவந்தார். ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்க பண்டிதப் பரீட்சையில் முதலாம் இடம் பெற்று பண்டிதர் ஆனார்.

பல பாடசாலையின் ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றினாhர். நாவலரினால் உருவாக்கப்பட்ட வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் அதிபராகவும் கடமையாற்றினார். நாவலர் தர்மகர்த்தா சபையின் செயலாளராகவும் கடமையாற்றினார். நாவலரது கல்வித் திட்டப்படி பாலபண்டிதர் வகுப்பு, சைவப் புலவர் வகுப்பு, திருமுறை வகுப்பு, சமஸ்கிருத வகுப்பு என்பன நடைபெற வழிசெய்தார். சங்கீதத்துறையில் ஈடுபாடு கொண்ட இவர் “சங்கீத கலா வித்தகர்” என்ற பட்டத்தினையும் பெற்றார். இவர் பல ஆக்கங்களை பத்திரிகையில் பிரசுரித்தார். அந்தவகையில் குமாரபுர ஊஞ்சல், இணுவையந்தாதி என்பன அவருடைய புலமையை எடுத்து விளம்புகின்றன. இல்லறத்துணைவியாக கண்ணகைப்பிள்ளை(மகேஸ்வரி) என்பவரை ஏற்றுக்கொண்டார். இவர்கள் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.
செகராய சேகரப் பிள்ளையாரினை குலதெய்வமாக கொண்டு வழிபாடு மேற்கொண்டார்.
இவ்பண்டிதர் 09-07-1996 செவ்வாய்க் கிழமை புண்ணிய வேளையில் 79 ஆம் வயதிலே இறைபதம் எய்தினார்.

நன்றி : தகவல் – ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம்.

மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345