பண்டிதர் வே. சண்முகலிங்கம்.

வேலுப்பிள்ளை சண்முகலிங்கம் ஏழாலையை சேர்ந்தவர். இளமைக் கல்வியை ஏழாலை சைவப்பிரகாச வித்தியா சாலையிலும் உயர் கல்வியை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்றார். மும்மொழிகளிலும் வல்லுனராக விளங்கிய இவர் பண்டிதர், சைவப்புலவர் ஆகிய பரீட்சையிலம் சித்தியெய்தினார். இதனால் பண்டிதர் வே. சண்முகலிங்கம் என அழைக்கப்பட்டார். சித்தாந்தத்தினையும், வடமொழி வேத சிவாகமங்களையும் பண்டிதர் பொன்னுத்துரை, வித்துவான் கந்தசாமி ஆகியோரிடம் கற்றுக்கொண்ட இவர் ஆசிரிய பயிற்சி கலாசாலையிலும் பயின்றவர். இணுவில் மு.பெரிய தம்பி ஆசிரியரின் இளைய மகளைத்திருமணம் செய்து மஞ்சத்தடியில் வாழ்ந்தார். இவர் ஆசிரியராக இணுவில் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றினார். 20 வருடங்களாக இந்துக்கல்லூரி இளையர் மன்றத்தில் காப்பாளாராக அறப்பணியாற்றி இவ்வுலக வாழ்வை நீத்தார். இம்மன்றத்தினர் இவரினை நினைவுகூர்ந்து அலுவலகத்தில் திருவுருவப்படத்தினை திரைநீக்கம் செய்துள்ளனர்.

ஆருணகிரி நாத சுப்பிரமணிய சுவாமி மீது ஊஞ்சற்பாட்டு பாடினார். இவரது சமூக சேவையினாலேயே காரைக்கால் மயானமும் சிரமதானம் செய்யப்பட்டது. இணுவில் சைவத் திருநெறிக்கழகமும் சிவகாமி அறநெறிப் பாடசாலையும் ஆரம்பமாவதற்கு ஆணிவேராக இருந்தவர். சிறந்த பயபக்தர், வெள்ளை உள்ளம் தூயவெண்ணிற ஆடை, நெற்றியில் துலங்கும் வெண்ணீறு ஆகியவையே இவரது தோற்றமாகும்.

By – Shutharsan.S

நன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345