பனம்பாத்தி

ஒரு திடலாக மண் பிட்டி அமைத்து அதில் பனங்கொட்டைகளை அடுக்கி முளைக்க விடுவார்கள் இதையே பனம்பாத்தி என்று குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தின் பின்னர் வேர் விடுத்து பனங்கிழங்கு உருவாகும். பனம் ஓலைத் தளிர்கள் ஓரளவு பாத்திக்கு மேல் துளிர்விட தொடங்கியதும் பாத்தியை கிண்டி கிழங்கை எடுப்பார்கள். இந்தக் கிழங்கின் தோலை உரித்து கீலமாகக் கீறி காயவிட்டு ஒடியல் தயாரிப்பார்கள். அத்துடன் கிழங்கை அவித்து நேரடியாகவும் சாப்பிடலாம் அல்லது காயவிட்டு புளுக்கொடியலாக பாவிக்கலாம். புளுக்கொடியலுடன் தேங்காய் சொட்டை சேர்த்து சாப்பிடுவது ஒரு தனிச்சுவையாக இருக்கும். புளுக்கொடியலை மாவாக்கி போசணை ஆகாரமாகவும் பாவிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஒடியலை மாவாக அரைத்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் காய்ச்சவும் பயன்படுகிறது. பனையை கற்பகதரு என அழைப்பதில் இருந்தே தெரிகிறது பனையின் முக்கியத்துவங்கள். பனம் உற்பத்திப் பொருட்களை பாவித்தே எம் முன்னோர்கள் நோயில்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தார்கள் என்றால் மிகையாகாது.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345