பன்றித் தலைச்சி அம்மன்

புத்தூர் மீசாலை வீதி, மட்டுவில்
0778791463

இக்கண்ணகி அம்மன் ஆலயம் பல நூற்றாண்டுகள் கழைமை வாய்ந்ததாகும். தற்போதுள்ள கோவில் கி.பி. 1750 இல் கட்டப்பட்டது. இது திருநகர் கதிர்காமம் என்பவரால் வைரக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இவ்வாலயத்திற்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் வரக்காரணம் பண்டைக் காலத்தில் வள்ளுவ குலத்தைச் சேர்ந்த பக்தன் ஒருவன் மாடு ஒன்றைக் கொன்று விட்டான். இவ்விடயம் ஊர் மக்களுக்குத் தெரிய வந்தது. தன் தவறை உணர்ந்த பக்தன் அம்மனை வேண்டித் தொழுதான். மறுநாள் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் மாட்டின் தலை புதைக்கப்பட்ட இடம் தோண்டப்படடது. அங்க பன்றித்தலையே காணப்பட்டது. அன்றிலிருந்து அம்பாள் பன்றித்தலைச்சி அம்பாள் எனப் பக்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது. பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித் திங்கள் உற்சவமானது மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்று வருகின்றது. இக்கோயில் யாழ் நகரிலிருந்து 20.6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. யாழ் நகரிலிருந்து சாவகச்சேரிக்கும் பின் மட்டுவிலுக்கும் செல்ல முடியும்.

நன்றி – காணொளி-madduvil net இணையம், படம் – tamilarul. net

Sharing is caring!

Add your review

12345