பறைகள், கொத்து

பறைகள், கொத்துக்கள்யாழ்ப்பாணக் குடாநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெல், குரக்கன், தினை, வரகு, போன்ற தானிய வகைகள் முன்பொரு காலத்தில் பறைக்கணக்காகவே விற்பனை செய்யப்பட்டது. சந்தைகளிலும் கூட சில்லறையாக அரிசி, தினை, குரக்கன் முதலியவற்றைக் கொத்துக்கணக்கில் விற்பனை செய்த காலமும் ஒன்றிருந்தது. ஒரு பறை அரிசி, அல்லது நெல், குரக்கன், தினை என்பவை இருபத்து நான்கு கொத்து அளவுடையனவாகும். சரியாக ஆறு கொத்துக் கொள்ளக்கூடிய, கைபிடிகளுடன் கூடிய பறைகள் அந்நாட்களில் வீடுகள் தோறும் இருந்தன. தினை விளைவித்தவர்களிடம் ஒரு காற்பறை அல்லது அரைப்பறை தினை தர முடியுமோ என்று கேட்பது அன்றைய வழக்கமாகும். இன்று இதன் பயன்பாடு இல்லை. ஒரு கொத்து, கால் கொத்து எனக் கொத்துக்கள் பாவனையிலிருந்த காலம் இன்று மறைந்து பறைகளையும் கொத்துக்களையும் கூட இன்று மாணவர்கள் அரும் பொருள் காட்சியகங்களிலேயே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். பறைகள், கொத்துக்கள் என்பன தமிழர் வாழ்வுடன் ஒன்றிப் பிணைந்துள்ளன.

 

நன்றி-http://jaffnaheritage.blogspot.com இணையம்

Sharing is caring!

1 review on “பறைகள், கொத்து”

  1. Aingharan says:

    கொத்தின் உள்விட்டம், உள் உயரம் வேணும்

Add your review

12345