பல்லாங்குழி விளையாட்டு

பல்லாங்குழி விளையாட்டுபல்லாங்குழி விளையாட்டு என்பது, பொது வாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி அவற்றுள் புளியங்கொட்டைகளை 5,5 ஆகப் போட்டு வைத்தல். ஒரு குழியில் இருப்பதை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும் . முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து அப்படியே சிந்திவர வேண்டும். முடிந்தவுடன் ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும். ஒரு குழியில் நான்கு இருந்தால் அதையும் ‘பசு’ எனச் சொல்லி தனதாக்க வேண்டும். கூடப் புளியங்கொட்டை வைத்திருப்பவர் வெற்றியாளர் ஆவார். இதில் கூடுதலாக எண்ணற் பறிற்சியும், அவதானமும் தான். இருவர் மட்டுமே விளையாடலாம்.

முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுது போக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணு க்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங் குழியும் ஒன்றாக இட ம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர் ‘தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்’ என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரிய ர் தாயம்மாள் அறவாணன் ‘பல்லாங்குழி (திராவிட ஆப் பிரிக்க ஒப்பீடு)’ என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உல கெங்கிலும் பல்லாங்குழி ஆட் டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது

பல்லாங்குழி விளையாட்டுஇதன் அமைப்பு – பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது.

பல்லாங்குழி ஆட்ட‍த்தின் வகைகள் – பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினை க் குறிப்பிடுகிறார் பாவாணர். பேராசிரியர் தாயம்மாள் அற வாணன் பல்லாங்குழி ஆட்டத் தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் அவ்வகைகள் ஆடப்படும் பகுதிகள் என விரிவான அட்டவணை தந்துள்ளனர்.

பல்லாங்குழி ஆட்டத்தின் அடிக்கூறுகளை பின்வருமா று வரையறை செய்து கொள்ள முடியும்:

இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக் குழியாக இருந்தால் வலது கைப்பக்கக் குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது.

தன்னுடைய காய்களை எடுத்து ஒருவர் ஆட்டம் தொடங்குகிற பொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது.

எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன.

சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு) யினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் (பெருஞ்செல்வம் / புதையல்) கிடைக்கின்றன.

ஆட்டத்தில் மற்றும் ஒரு இடை நிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும் போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார்.

இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை.

காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய் கள் குறைவாகக் கிடை த்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிற போது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

By -‘[googleplusauthor]’

 

Sharing is caring!

3 reviews on “பல்லாங்குழி விளையாட்டு”

  1. சிறப்பு, தொடரட்டும் தங்களின் ஆய்வியல். நன்றி

  2. joker says:

    பல்லாங்குழி பதிவு மிகவும் தெளிவான விரிவுரை. சிறப்பாக உள்ளது. காலத்தால் அழிந்து வரும் பழைய பாரம்பரிய விளையாட்டுக்களை உயிர் கொடுக்க மிகவும் பயனுள்ள பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

  3. தங்களின் கருத்திற்கு நன்றி

Add your review

12345