பார்வதி அம்மையார்

இவர் புலோலி கணபதிப்பிள்ளை பண்டிதரின் சகோதரியாவார். வடமராட்சியில் புகழ் பெற்ற சைவப்பெரியார் சிவபாதசுந்தரத்தின் மாமியாராவார். இவருடைய வழிகாட்டலிலேதான் மதுரை தமிழ் சங்கம் நடத்திய பண்டிதர் பரீட்சையில் 2 பெண் பிள்ளைகள் சித்தியடைந்தார்கள். இவர் பொதுவாக பாறாச்சி என அழைக்கப்பட்டார். இவரைப்பற்றி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறினார். “ வான்மீகத்தை சமஸ்கிருதத்தில் வாசித்து விளக்கம் செய்யும் திறமை இருந்தது. தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களை கதை சொல்வது போல் கற்பித்துவிடுவார்.

Sharing is caring!

Add your review

12345