பாலையடிப் பிள்ளையார் ஆலயம்- மீசாலை கிழக்கு

சைவசமயமே உண்மைச் சமயம், கலாச்சாரமே எமது உயிரினும் மேலானது என்ற பண்பாட்டுடன் வாழ்ந்து வரும் சைவசமயச் சான்றோராக வாழ்பவர்கள் தென்மராட்சி மக்கள். மீசாலையில் நாலாபுறமும் தானாக அருட்காட்சி கொடுத்து வெளிவந்து அருளாட்சி புரியும் விநாயகர் ஆலயங்களில் மீசாலை கிழக்கு பாலையடிப் பிள்ளையார் ஆலயமும் ஒன்றாகும். தான்தோன்றியாக லிங்கவடிவமாக இருந்து அருளைப் புரிகின்றார். 1925 ஆம் ஆண்டளவில் மீசாலை கிழக்கில் வசித்து வந்த வைத்தியர் வினாசித்தம்பி என்பவருக்கு உரிய காணியைத் துப்பரவு செய்த போது பாலைமரம் ஒன்று பாரிய விருட்சமாக காட்சி கொடுத்தது இதனையும் அகற்றும் நோக்குடன் தறித்தார்கள். தறித்தவர்கள் அதிர்ச்சி அடையும் படியாக இரத்தம் பீறிட்டுப் பாய்ந்து வந்தது. துப்பரவு செய்தவர்கள் அப்படியே அதனை நிறுத்திவிட்டுச் சென்றார்கள். இந்த நிலையில் அன்று இரவு ஆறுமுகம் என்னும் அடியவரின் கனவில் எம்பெருமான் தோன்றி அருட்காட்சி கொடுத்து அம்மரத்தடியில் லிங்கம் ஒன்று இருப்பதாகவும் அதனை எடுத்து அந்த மரத்தைத் தறிக்காது அவ்விடத்தே வைத்து வழிபடும்படியும் அருள்வாக்கு வழங்கினார். பின்னர் சிறுகுடிசை அமைத்து அந்த லிங்கத்திற்கு பூசைசெய்து வந்தார். திருப்பணிகள் நடைபெற்று 1954 ஆம் ஆண்டு வைகாசி மாதம் கும்பாவிசேகம் சிறப்புற நடைபெற்றது.

மாதாந்த சதுர்த்தி, ஆவணிச் சதுர்த்தி, திருவாசகமுற்றோதல், வெள்ளிக் கிழமை தோறும் கூட்டுப்பிரார்த்தனை, பண்ணிசை என்பனவும் நடைபெறுகின்றன.

Sharing is caring!

Add your review

12345