பாவலர் துரையப்பாப்பிள்ளை

பாவலர் துரையப்பாப்பிள்ளை தெல்லிப்பழையில் சைவ சமயியாகப் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்ற போது கிறிஸ்தவரானார், 1910இல் மீண்டும் சைவரானார். இன்றைய யூனியன் கல்லூரியின் முன்னோடிப் பாடசாலையில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றிய பின் 1910 மகாஜனா உயர் நிலைப்பள்ளி என்ற பாடசாலையை நிறுவி அதன் வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்தார். இதுவே இன்று புகழ் பூத்த மகாஜனக் கல்லூரியாகத் திகழ்கிறது.

“பாவலர் ஈழம் பெற்றெடுத்த புதுமைத் தமிழ்க்கவிஞர்களுள் ஒருவர். தலையாவார். அவரது புகழை எமது நாடு இன்னும் பூரணமாக அறியவில்லை. அறியும் போது தேசியக் கவிஞர் வரிசையில் முதலிடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை.”
(தினகரன் 24-06-1970)

கலாநிதி செ. வேலாயுதம்பிள்ளை அவர்கள் தனது ஒப்பியல் ஆய்வில் “பாரதி தமிழ் நாடு தந்த செல்வம், அந்தப் பாரதியைப் போலவே கவிதை உள்ளம் படைத்த ஒருவர் நமது ஈழநாட்டிலே யாழ்ப்பாணத்திலே ஏறத்தாழ ஒரே காலப்பகுதியில் விளங்கினார். அவர் தான் பாவலர் துரையப்பாப்பிள்ளை. இற்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னே பிள்ளை அவர்களின் பதங்களும், கீர்த்தனைகளும், கும்மிகளும், பிறபாடல்களும் யாழ்ப்பாணத்திலே பிரசித்தி பெற்றிருந்தன….. அவரது கன்னிப்படைப்பான “இதோபதேச கீதரசமஞ்சரி” என்னும் நூல் 1901 ஆம் ஆண்டில் வெளிவந்தது….. பாரதியாரின் முதற்கவிதையாகிய “தனிமை இரக்கம்” 1903-04 இல் வெளிவந்தது. இதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே துரையப்பாப்பிள்ளையின் கீரசமஞ்சரி வெளிவந்துவிட்டது.

(பாவலர் துரையப்பாப்பிள்ளை நூற்றாண்டு விழாமலர் மகாஜனக் கல்லூரி 1972பக் 65)

பாவலர், சிவமணி மாலை, யாழ்ப்பாண சுதேச கும்மி, எங்கள் தேச நிலை என்பவற்றுடன் தனிப்பாடல்களையும் பாடினார். 1960ஆம் ஆண்டு மேற்கூறப்பட்ட அவரின் ஆக்கங்கள் அனைத்தினதும் தொகுப்பாக “சிந்தனைச்சோலை”  தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரியின் பொன் விழா நினைவாக வெளியிடப்பட்டது.
இவரால் நிறுவப்பட்ட தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி இப்பிரதேசத்திற்கு எண்ணிலா அறிஞர்களைத் தந்து தலைநிமிர்ந்து நிற்கின்றது.

Sharing is caring!

Add your review

12345