புதறானை ஸ்ரீசித்தி விநாயகர்

‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்கவல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து’

புதறானை ஸ்ரீசித்தி விநாயகர்

மாபெரும் சிவபக்தனான இலங்கேஸ்வரன் இராவணன் கோலோச்சி எங்கள் ஈழவள திருநாட்டின் வடபால் ஐந்தாம் குரவரென்று போற்றிப் பூசிக்கப்படும் சைவப் பெருந்தகை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் வாழ்ந்த நல்லைநகர் யாழ்ப்பாணத்திற்கு வடமேற்காக 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வளம்மிக்க சிற்றூரே வடலியடைப்பு.

இக்கிராமம் கிழக்கை மையமாகக் கொண்டு கோணிய பிறை வடிவாக கழனிகளால் சூழ்ந்திருக்கும் சிற்றூர் ஆகும். இங்கு சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் எம்முன்னோர்கள் தந்த வழிபாட்டு தலமாக தற்பொழுது கோவில் கொண்டிருக்கும் புதறானை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம் ஆகும்.

ஒல்லை எனும் இடத்தில் திரு. வேதவனம் தாமோதரம்பிள்ளை சந்ததியினரால் உவந்தளிக்கப்பட்ட வயற்பாங்கான காணியில் இவ்ஆலயம் அமைந்துள்ளது. கொட்டிலாக இருந்து பெருங்கோயிலாக வடிவமைக்கப்பட்ட வேளை இவ்வாலயத்தின் மூலஸ்தான மூர்த்தியான ஸ்ரீ சித்தி விநாயகருக்கு விக்கிரகம் அமைக்கும் பொருட்டு இவ்வாலயத்தின் புகழ்பூத்த அர்ச்சகர் பிரம்மஸ்ரீ அப்பாசாமிக்குருக்கள் அருணாசல சாஸ்திரிகள் மூலஸ்தானத்திற்கு ஏற்புடைய விக்கிரகம் ஒன்றை இந்தியா சென்று பெற்றுவந்தார். அதனை பிரதிஷ்டை செய்து அடியார்களால் இற்றைவரை பூசிக்கப்பட்டு வருகின்றது.

23.09.1973ல் ஆலய முன்றலில் 300 பேர்கொண்ட பொதுமக்கள் முன்னிலையில் 25 அங்கத்தவர்களை கொண்ட பரிபாலன சபைத் தெரிவு இடம்பெற்று நிர்வாகத்தின் வழிகாட்டலில் இற்றைவரை இவ்வாலயம் செழிப்போடு விளங்குதை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

கோயில் அமைப்பு

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ திராவிட கட்டடக்கலை மரபை பிரதிபலிக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பஞ்சதள இராஜபோபுர கட்டுமானங்களுடன் காட்சியளிக்கின்றது.

உட்பிரகாரம்

சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய தூபியைக் கொண்ட கருவறையும், அர்த்த மண்டபமும் தூண்களைக் கொண்ட மகாமண்டபமும் பலவர்ணங்களால் மெருகூட்டப்பட்டு காட்சியளிக்கின்றது.

தம்பமண்டபம்

நந்தி, பலிபீடம், வெள்ளிக் கவசத்தினாலான கொடித்தம்பமும், ஸ்தம்ப விநாயகப் பெருமானும் அருள்பாலித்த வண்ணமுள்ளார்.

 பஞ்சமுக விநாயகர்

 மகாலட்ஷ்மி

 கலியுகவரதனுக்கோர் கோயில்

 சண்டேஸ்வரப்பெரமான

 நவக்கிரகங்களுக்கோர் கோயில

 வசந்த மண்டபம்

 உட்பிரகாரம் கிழக்குப் பக்கமாக யாகசாலை, மணிக்கூட்டுக்கோபுரம், வைரவர் ஆலயம்

 தெற்கு வெளி வீதியில் மடங்களும்

 வடக்கு வெளி வீதியில் பைரவர் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம், அருணாசலசாஸ்திரியாருக்கு ஓர் சிலை

 கிழக்கு வெளி வீதியில் தேர் தரிக்கும் மண்டபம், தேர்முட்டி ஓர் கேணியும் காட்சியளிக்கின்றன.

உற்சவங்கள்

 பூஜைகளான நித்திய, நைமித்திய, காமிய பூஜைகள் இடம்பெறுகின்றன.

 மகோற்சவம் ஆவணி மாதத்து பௌர்ணமி தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் முகமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பன்னிரு நாட்கள் திருவிழாக்கள் வெகுசிறப்பாக நடைபெறும்.

 ஏனைய உற்சவங்களும் இடம்பெறும்.

மேலும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றான நினைவில் நிறுத்த வேண்டிய பெரியோர்களாக பிராமணப் பெருமக்கள், நிர்வாக கட்டமைப்பு ஏற்பட முன் முகாமைத்துவத்தில் பங்கேற்ற தொண்டர்கள், நிர்வாக கட்டமைப்பு ஏற்பட்ட பின் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் தற்போது ஆட்சியிலிருக்கும் நிர்வாக சபையினர் ஏற்புடையோர் ஆவார்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் -http://www.thondarsabai.com இணையம்.

Sharing is caring!

2 reviews on “புதறானை ஸ்ரீசித்தி விநாயகர்”

  1. ARULCHELVAN says:

    தேர்திருவிழா அவர்கலின் சந்ததியிணரால் சிறப்பாக நடைபெறுகின்றது)

  2. ARULCHELVAN says:

    தேர்திருவிழா அவர்கலின் சந்ததியிணரால் சிறப்பாக நடைபெறுகின்றது)

Add your review

12345