புன்னாலை சிவானந்தையா

புன்னாலை சிவானந்தையா
நாவலர் மரபிலே ஒருவராக விளங்கிய சைவத்தமிழ் அறிஞர். இலக்கணம். இலக்கியம், சமயம் என்பவற்றோடு மெய்யியலிலும் சிறந்து விளங்கினார். சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி அவர்கள் இவரிடம் பாடங்கேட்டவர் என்பர். பண்டிதமணி பின்வருமாறு கூறுவர்:-

“……. அக்காலத்திலே பிரசித்திபெற்ற வித்துவான் சிவானந்தையரிடம் படிக்கும் ஒழுங்கு செய்யப்பட்டது. வடக்கே அரஞ்சண்முகனார் என்றால் இங்கே ஒருசிவானந்தையர். ஐயர் மிகக் கூரிய மகாவிவேகி……….” (சிந்தனைக்களஞ்சியம் 1978,பக் 239.)

சிவானந்தையர் பலநூல்களை எழுதியும் உரைவிளக்கம் செய்தும், மொழிபெயர்த்தும், பதிப்பித்தும் உள்ளார்.

இலக்கணம் – அகப்பொருள்விளக்கம் 1907
இலக்கியம் – புலியூர்ப்புராணம் 1936
தசகாரியம்
நகுலமலைக்குறஞ்சி
நவக்கிரக கவசம்
புலியூர்யமக வந்தாதி
வரலாறு – தருக்கசங்கிரகம்

என்பவற்றுடன் திருக்குறள் முதலதிகார விருத்தியுரை, நீதிநெறி விளக்கவுரை, நீதிவெண்பாவுரை, சனிதுதி (1910) என்பவற்றையும் எழுதிப்பதிப்பித்துள்ளார்.

பாவலர் துரையப்பாபிள்ளை அம்பனையில் மகாஜனக்கல்லூரியை நிறுவினர். சிவானந்தையர் அதற்கு பக்கத்தில் பன்னாலையில் வசித்தார்.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிவானந்தையர் துரையப்பாப்பிள்ளையைச் சந்தித்து உரையாடுவார். சிவானந்தையரின் தொடர்பு பாவலர் துரையப்பாபிள்ளையைச் சைவத்தமிழ் அறிஞராக மலர உதவியது.

Sharing is caring!

Add your review

12345