புலவர் ம.பார்வதிநாதசிவம்

புலவர் ம.பார்வதிநாதசிவம்  அவர்கள் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் மயிலங்கூடலை வாழ்விடமாகவும்  கொண்டவர். குருகவி மகாலிங்கசிவம் அவர்களின் மகனாகிய இவர்  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  பயின்று ‘புலவர்’ பட்டம் பெற்றவர்.

சங்க இலக்கியங்களில் ஆழமான  பயிற்சியுடைய இவர் பத்திரிகையாளராக நீண்ட கால அனுபவத்துடன் பணிபுரிகின்றார். சங்க இலக்கியங்களையும் நவீன இலக்கியங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்து கட்டுரை ஆக்கங்கள் பலவற்றை  வெளியிட்டுள்ளார்.

ஈழநாடு, முரசொலி, உதயன், சஞ்சீவி ஆகிய பத்திரிகைகளில்  பணியாற்றியவர்.

நவீன இலக்கியப் போக்கில் கவிதையில்  அமைந்த ‘காதலும் கருணையும்’ 1972 “இருவேறு உலகம்” 1980, நூல்களும்  குறுங்காவியங்களான “இரண்டுவரம் வேண்டும்” 1985 “இன்னும் ஒரு திங்கள்” முதலானவை ரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்றவையாகும்வசன ரூபத்தில் “நுண்மாண் நுழைபுலம்” 1999 என்ற நூல் வெளிவந்துள்ளது, கையெழுத்துப் பிரதிகளாகப் பல நூல்கள் இருக்கின்றன.

சஞ்சீவியில் வந்தபோது “பசிப்பிணி மருத்துவன்” என்னும் செய்யுள் நடையிலான குறுங்காவியம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. புறநாநூற்று செய்தியை தாங்கி வரும் நவீன காவியம் இது. இவரது செய்யுள் நடை மிக இலகுவானதும் சுவையானதும் ஆகும் உதாரணமாக

“அறமிதொன்றும் மறமிதொன்றும் எடுத்துக் கூறும்; அற்புத நூல் திருக்குறளும் நமக்குச் சொந்தம் உறுவிதியின் ஆற்றலினை விளக்கிக் கூறும் உயர் நூலாம் சிலம்பும் தான் நமக்குச் சொந்தம்

இவரது கவிதையில் நகைச்சுவை இழையோடுவதையும் அதேநேரம் ஆழமான கருத்தோட்டம் இருப்பதையும் காணலாம். உதாரணம் வைத்தியசாலையில் ஒரு காட்சி

“நாடியைப்பார்த்தாரில்லை
நயனத்தைப் பார்த்தாரில்லை.
மாடியனை எமுதித்தந்தார்
நாடியைப் பாத்துத் தந்தால்
நன்றென்றென் அயலில் நிற்கும்
வேலடியைப் பார்க்க வேண்டும்
“லேற்” இன்னேவாபோ என்றார்”

இக்கவிதை இவரது சமகாலம் நோக்கையும் காட்டுகிறது.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345