பூதம் வெட்டிய கிணறுகள்

சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் பொழியப்பட்ட சில நன்னீர்க் கிணறுகள் காணப்படுகின்றன. சுமார் முப்பது கிணறுகள் வரை ஒன்றுக்கொன்று மிக அண்மையில் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் பத்தடி ஆழமுடையன. சில கிணறுகள் இணைத்துக்கட்டிய வடிகால்களும் நீர்த்தொட்டிகளும் சிதைந்த நிலையில் கணப்படுகின்றன. குதிரைகளுக்காகவே இக்கிணறுகள் வெட்டப்பட்டன என அறியப்படுகின்றது. இவை இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பொழியப்பட்டிருந்தால் இவை மனித வலுவுக்கப்பாற்பட்ட ஒரு சக்தியினால்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டுமென மக்கள் கருதுவதனால் இவற்றை பூதம் வெட்டிய கிணறுகள் என அழைக்கிறார்கள். இவற்றில் சில கிணறுகளிலிருந்தே தீவிற்கான குடிநீர், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

Sharing is caring!

Add your review

12345