பெரியார் செல்லப்பா மயில்வாகனம்

பெரியார் செல்லப்பா மயில்வாகனம் அவர்களைப்பற்றி “ செந்நெறியோன்” பண்டிதர் க. நாகலிங்கம் அவர்களின் பதிவு

“பொதுப் பணிகள் மட்டுமல்லாமல் தனிப்பட்டவர்களின் குறைமுடிக்க உதவவும் அவர் பின்னின்றாரல்லர். நோயுற்ற ஒருவர் தம்மை வைத்தியரிடம் கூட்டிச் செல்ல உதவி கேட்டாலும் அவர் உதவி செய்பவர். அவருடைய மகன் அரசாங்க அதிபராக இருந்தாலும் அவர் முன்னாளில் பிரபல கல்லாரியில் ஆசிரியப்பணி பூண்டதாலும் அவரைத் தெரியாத அரசாங்க அதிகாரிகள் இல்லையென்றே கூறலாம் தமது பிள்ளைக்கு ஏதாவது உத்தியோகம் எடுத்துக் கொடுக்கும்படி யாருங்கேட்டாலும் தம்மாலாகிய உதவி புரிய அவர் பின்னின்றதில்லை. இனமதபேதமின்றி எல்லார்க்கும் உதவுவது அவர் இயல்பு அரசாங்க சட்டசபை உறுப்பினராயும் பாராளுமன்ற உறுப்பினராயும் இருந்த சு.நடேசபிள்ளை அவர்களோடு நெருங்கிய நட்புப்பூண்ட இவர் மூலம் எத்தனையோ கிராம மக்கள் சடேசப்பிள்ளையை அணுகி தமது தேவையைப் பூர்த்தி செய்ததும் உண்டு இராமநாதன் அறக்கட்டளை நிதியத்துக்கு சட்ட பூர்வமான பொறுப்பாளியாகவும் இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் எந்தப் பொறுப்பை ஏற்றாலும் எந்த நிதியை எடுத்தாலும் அவரது கை கறைபடியாததாக இருந்ததே அவரில் பொதுத் தாபனங்களும் மக்களும் நம்பிக்கை கொள்ளக் காரணமாயமைந்ததென்பது மறுக்க முடியாத பெருமையாகும். அருணோதயாக் கல்லூரியை அரசினர் பொறுப்பேற்ற போது முகாமையாளராக இருந்தவரும் இவரே”

செல்லப்பா மயில்வாகனம்அளவெட்டிக் கிரா மத்தில் தொண்டர்கள் பலர் தோன்றி மக்கட் பணிகளில் ஈடுபட்டு வந்தனரென்பதற்கு இங்குள்ள தொண்டு நிறுவனங்களே சான்றாவன. சனசமூக நிலையங்களென்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் என்றும் பாடசாலைகள் என்றும் அரசினர் வைத்தியசாலை என்றும் தபாற் கந்தோர் என்றும் பல இயங்கி வந்தாலும் மக்கள் முயற்சியால் அளவெட்டி முழுவதற்கும் பொதுவாக இயங்கிய அளவெட்டி மகாசன சபை, அளவெட்டி சைவ வாலிபசங்கம் என்னும் இரண்டினையுமே இங்கு முக்கியமாகக் கொள்கிறோம். இவ்விரண்டிலும் ஆண்டு பலவாகத் தலைவராக இருந்து பணிபுரிந்தவர். செ. மயில்வாகனம் அவர்கள். இவர் செல்லப்பாச் சட்டம்பியார் எனப்படும் திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரின் மகனாவார். இவர் அளவெட்டியிற் பிறந்து தந்தையாரின் திண்னைப் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிற் கல்வி பயின்றவரென அறிய முடிகிறது. கல்வியை முடித்த பின் இராமநாதன் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார்.இவர் மணம் முடித்து ஒரு மகனுக்குத் தந்தையானார். அந்த மகனே யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்து அனைவராலும் பாராட்டப்பெற்ற சிறீகாந்தா ஆவர். இவர் இளமைக் காலத்தின் பின் அளவெட்டியோடு நெருங்கிய தொடர்பற்றவராகவிருந்தார். 1947ம் ஆண்டளவில் இவர் அளவெட்டிக்கு வந்து ஒரு ஆச்சிரமம் அமைத்து வாழத் தொடங்கினார். அதன் பின்னர் அவர் பொதுத் தொண்டுகளில் ஈடுபட்டு அரும்பணியாற்றினார். முதலில் பல்லாண்டுகளாகக் கவனிக்கப்படாதிருந்த மகாசன சபையின் தலைவரானார். இவர் தலைவராகவிருந்த காலத்தில் மகாசனசபை பெருந் தொண்டாற்றியதென்பது யாவருமறிந்ததே. கட்டத் தொடங்கி குறையில் இருந்த மகாசன சபை மண்டபத்தை அரசினர் உதவி பெற்று முழுமையுறச் செய்தவரும் இவரே. இவருடைய முயற்சியின் பேறாக ஒரு நெசவு சாலை உருவாக்கப்பட்டது. இந்நெசவு சாலையில் பெண்பிள்ளைகள் பலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டனர். அப்பிள்ளைகளுள் சிலர் பின்னாளில் நெசவாசிரியர்களாக இருந்து அரசினர் வேதனம் பெற்று இன்று ஓய்வூதியமும் பெறுகின்றனர் என்பது மயில்வாகனம் அவர்களது தொண்டுக்கு சான்று பகர்வதாகும். அளவெட்டி மகாசன சபைக் காணியில் ஒரு நெசவு நிலைய கட்டடத்தை அமைத்த பெருமையும் அவருக்குரியதே நெசவுசாலை மட்டுமன்றி அளவெட்டியில் பல பொதுப் பணிகளையும் அவர் நிறைவேற்றியுள்ளார். அளவெட்டி மகாசன சபைத் தலைவராக இருந்து பல பணிகளை நிறைவேற்றியது போலவே அளவெட்டி கும்பிழாவளை பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாக்கள் சபைத் தலைவராக இருந்தும் பல பணிகளை மேற்கொண் டார். அவர் தலைவராக இருந்த காலத்திலேயே ஆலயத்திருப்பணிகள் பல நிறைவேறின. கும்பழாவளை ஆலயக் கிழக்கு வாயிற்கோபுரமும் ஆலயமுகப்பு மண்டபமும் அவர் காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டன. தேர்முட்டி, தேர்விடும் மண்டபம், தண்ணீர்த்தாங்கி, தீர்த்தக்கேணி ஆரம்பம் இவைகளும் அவர் காலத்திலேயே நடைபெற்றன. இவர் தனது நேரத்தின் பெரும் பகுதியை இந்தத் தாபனங்களின் வளர்ச்சிக்காகவே செலவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.பொதுப் பணிகள் மட்டுமல்லாமல் தனிப்பட்டவர்களின் குறைமுடிக்க உதவவும் அவர் பின்னின்றாரல்லர். நோயுற்ற ஒருவர் தம்மை வைத்தியரிடம் கூட்டிச் செல்ல உதவிகேட்டாலும் இவர் உதவி செய்பவர். அவருடைய மகன் அரசாங்க அதிபராக இருந்ததாலும் இவர் முன்னாளில் பிரபல கல்லூரிகளில் ஆசிரியப்பணி பூண்டதாலும் அவரைத் தெரியாத அரசாங்க அதிகாரிகள் இல்லையென்றே கூறலாம் தமது பிள்ளைக்கு ஏதாவது உத்தியோகம் எடுத்துக் கொடுக்கும்படி யாருங்கேட்டாலும் தம்மாலாகிய உதவி புரிய இவர் பின்னின்றதில்லை. இன மதபேதமின்றி எல்லார்க்கும் உதவுவது இவர் இயல்பு. அரசாங்க சட்டசபை உறுப்பினராயும் பாராளுமன்ற உறுப்பினராயும் இருந்த சு. நடேச பிள்ளை அவர்களோடு நெருங்கிய நட்புப் பூண்ட இவர் மூலம் எத்தனையோ கிராமமக்கள் நடேசபிள்ளையை அணுகி தமது தேவையைப்பூர்த்தி செய்ததும் உண்டு இராமநாதன் அறக்கட்டளை நிதியத்துக்கு சட்டபூர்வமான பொறுப்பாளியாகவும் இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் எந்தப் பொறுப்பை ஏற்றாலும் எந்த நிதியை எடுத்தாலும் அவரது கை கறைபடியாததாக இருந்ததே அவரில் பொதுத் தாபனங்களும் மக்களும் நம்பிக்கை கொள்ளக் காரண மாமைந்ததென்பது மறுக்கமுடியாத பெருமையாகும். அருணோதயாக் கல்லூரியை அரசினர் பொறுப்பேற்ற போது முகாமையாளராக இருந்தவரும் இவரே.அளவெட்டியிலிருந்த ஒரு அரசாங்க உத்தியோகத்தர் சட்டபூர்வப் திருமணப் பதிவில்லாமலே திருமணம் செய்து கொண்டார். பிள்ளைகள் இருந்தபோதும் அவர் தம் திருமணப் பதிவை மேற்கொள்ளாமல் இருந்தது துரதிஷ்டவசமானது. இவர் அக்கால விதானையாராக இருந்தும் இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கதக்கதே. திடீரென இறந்துவிட்டார். அவரது குடும்ப நிலையை உணர்ந்தார் மயில்வாகனம். அக்குடும்பத்துக்குதவ பெரிதும் முயன்றார். அவர் முயற்சியின் பேறாக விதானையாரின் மனைவிக்கு விதவை ஓய்வூதியம் கிடைப்பதாயிற்று. இவ்விதவை இன்றும் ஓய்வூதியம் பெறுகிறாரென்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தொண்டு இவ்வாறு நயப்புக்குரியது.

-செந்நெறியோன் பண்டிதர் க. நாகலிங்கம் அவர்களின் பிரதான தொகுப்பில் உருவான வேரூன்றி விழுது பரப்பும் ஆலமரம் நூலில் இருந்து.

நன்றி – அளவெட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345