பேதுருப்புலவர்

தெல்லிப்பளையை சேர்ந்த கத்தோலிக்கர்.  இவர் “யாகப்பர் அம்மானை” என்ற சிற்றிலக்கியத்தை பாடியுள்ளார்.  இது “சந்தியோகுமையார் அம்மானை” எனவும் பெயர்பெறும்.  கத்தோலிக்க சமய உண்மைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.  ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் (1918 பக்கம் 89) இவரைப்பற்றி கூறும் தகவல் இங்கு நோக்கத்தக்கது.

“பேதுருப்புலவர் என்பவர் 1647ல் இயற்றியது சந்தியோகுமையர் அம்மானை.  இவர் தெல்லிப்பளை வாசனகாலத்தில் யாழ்பாணத்தில் வலிகாமம் மற்றும் அதில் தெல்லிப்பளையுமே சிறந்த இடமாக விளங்கியது.  இந்நூல் கிளாலியிலுள்ள கத்தோலிக்க ஆலயத்தை சிறப்பித்துப் பாடப்பட்டது.  அக்காலத்தில் திருநாட் காலத்தில் சைவ ஆலயங்களைப்போல் தேர் இழுத்தலும் வழக்கமாக இருந்தது.

Sharing is caring!

Add your review

12345