பேராசிரியர் இந்திரபாலா

பேராசிரியர் இந்திரபாலா

பேராசிரியர் இந்திரபாலா திருநெல்வேலியை வசிப்பிடமாகக் கொண்ட வர்.(கார்த்திகேசு இந்திரபாலா – வரலாற்று ஆய்வு இலக்கியம்) வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். யாழ்ப்பாணக் கல்லலூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை (1965) பெற்றார். இவர் எடுத்துக் கொண்ட ஆய்வு “ஆதி இலங்கையில் திராவிடக் குடியிருப்புக்கள்“என்பதாகும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும் பின்பு யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது வரலாற்றுத்துறை பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் (இன்றைய கலைப்பீடம்) முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984ல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியயவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

1960 களில் திருகோணமலை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து “சிந்தனை” எனும் சமூக விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரித்துள்ளார் பேராசிரியர் இந்திரபாலா. 1970 ல் கந்தரோடையில் பென்சில்வேனிய பல்கலைக்கழகம் நடாத்திய தொல்லியல் அகழ்வாய்விலும், பொன்பரிப்பு அகழ்வாய்விலும் ஈடுபட்டார்.  1971 ல் யாழ்ப்பாணத்தில் “பூர்வகலா” எனும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் பற்றிய விழ்ப்புணர்வை ஏற்படுத்தினார். யாழ்ப்பாணத்திலும் வேறு சில இடங்களிலும் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுக்களை வேறு சிலருடன் இணைந்து “Epigraphica Tamilica” எனும் நூலில் வெளியிட்டுள்ளார்.

“The Sri Lanka Journal of South Asian Studies” எனும் ஆங்கில சஞ்சிகையை தொடக்கி வைத்தும், சமகால அரசியல், பொருளியல், கலாச்சார சிந்தனைக்கேற்ப தென்னாசியவியலில் கவனம் செலுத்தி “தென்னாசியவியல் சங்கம்”ஒன்றையும் நிறுவினார். “யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்” “இலங்கையில் திராவிட கட்டடக் கலை“, “The Evolution of an Ethnic Identity The Tamils in Sri Lanka C 300 BC to C1200“, “இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு” போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி வரலாற்று ஆய்வுக்கு புத்துயிர் ஊட்டிய பேராசான் ஆவார்.

Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345