பேராசிரியர் சத்தியசீலன்

சத்தியசீலன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகவும், உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கும் பேராசிரியர் சமாதிலிங்கம் சத்தியசீலன் (தோற்றம் – 20.04.1951) வேலணை மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றவர். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டவர். வேலணையில் பிறந்த இவர் நல்லூர் பிரதேச செயலக பிரிவில் வாழ்ந்து வருகிறார்.

1997 ம் ஆண்டில் இருந்து 2008 ம் ஆண்டு வரை யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவராக இருந்த இவர் 2008 ம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக இருந்து வருகின்றார். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர், நல்லூர் லயன்ஸ் கழகத் தலைவர், லயன்ஸ் கழக மாவட்டத் தலைவர், கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் பரிபாலன சபை, தந்தை செல்வா ஞாபகார்த்த நிதியம், யாழ் இந்து சகல ஒளி நூற்றாண்டு மலர் ஆசிரியர் ஆகிய பதவிகளை பேராசிரியர் சத்தியசீலன் வகித்துள்ளார். இந்திய சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் கலாநிதிப்பட்ட ஆய்வாளர் புலமைப் பரிசில், இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புலமைப்பரிசில், இலண்டன் தமிழ் தகவல் ஒன்றியத்தின் புலமைப்பரிசில் ஆகிய புலமைப் பரிசில்களையும் பெற்றுள்ளார். வரலாற்றுத்துறை சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இதுவரை எழுதியுள்ளார். தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டும், தொடர்ந்தும் ஆய்வுத் துறையில் ஈடுபட்டு வரும் இவரின் நூல்களில் இலங்கை அரசியல் மொழியும் மதமும், இலங்கை இனப்பிரச்சினையில் பொருளாதார மூலங்கள், இலங்கைத் தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள், மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகமும் என்னும் நூல்கள் முக்கியமானவை. இதில் மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகமும் என்ற நூல் 2006 ம் ஆண்டுக்கான சம்பந்தர் விருதினையும், இலங்கை இலக்கியப் பேரவை விருதினையும் பெற்றுள்ளது.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345